haiiii

இலங்கையில் அரசியல் கட்சிகளின் தோற்றம்

 -V.E.N.நிருபர்

இலங்கையின் நவீன வரலாறு என்பது பிரித்தானியர் ஆட்சிக்கலத்துடன் ஆரம்பமாகிறது . 

பிரித்தானியர்1769 இல் இலங்கையைக் கைப்பற்றியிருந்தாலும் 1833 இல் அறிமுகப்படுத்தப்பட்ட கோல்புறூக் அரசியல் சீர்திருத்தத்தைத் தொடர்ந்து நவீன அரசியல் இலங்கையில் தோற்றம் பெற ஆரம்பித்தது .

ஆரம்பத்தில் கோல்புறுக் சீர்திருத்தத்தினூடாக பிர்தானிய மாதிரியிலான சட்டசபை , பிரதிநிதித்துவ முறை என்பன அறிமுகப்படுத்தப்பட்டன. 

பின்னர் தொடர்ந்து தேர்தல் முறை பிரதேசவாரிப் பிரதிநிதித்துவ முறை , சர்வன வாக்குரிமை என்பன அறிமுகப்படுத்தப்பட்டன .

1931 ஆம் ஆண்டு டொனமூர் அரசியல் யாப்பினூடாக சர்வசன வாக்குரிமை அறிமுகப்படுத்தப்பட்டாலும் பிர்தானிய மாதிரியிலான பாராளுமன்றம் அரசாங்க முறை முழுமையாக அறிமுகப்படுத்தவில்லை . பிர்தானிய மாதிரியிலான பாராளுமன்ற அரசாங்க முறை என்பது கட்சி முறை அரசாங்கத்துக்குரிய அரசாங்க முறை ஆகும் . 

அதாவது பொதுத் தேர்தலில் எக்கட்சி பெரும்பான்மையான ஆசனங்களைப் பெறுகின்றதோ அந்தக் கட்சியிடம் அரசாங்கம் அமைக்கும் பொறுப்புள்ளது . 

இம்முறை அறிமுகமாக்கப்பட்டதால் 1935 ம் ஆண்டு வரை இலங்கையில் அரசியல் கட்சிகள் இருக்க வில்லை . 1928 இல் ஏ.ஈ . குணசிங்கவினால் தொழிற்கட்சி என்ற பெயரில் ஒரு கட்சி உருவாக்கப்பட்ட போது அது ஒரு அரசியல் கட்சிக்குரிய பண்புகளைக் கொண்டதாக அமையவில்லை . 

இதனால் இலங்கையின் முதலாவது அரசியற் கட்சியாக தொழிற்கட்சியை அரசியல் அறிஞர்கள் கருதவில்லை .

இலங்கையின் முதலாவது அரசியற்கட்சியாக லங்கா சமசமாஜக் கட்சி (I.S.S.P) 1935 இல் தோற்றம் பெற்றது . 

இதைத் தொடர்ந்து டொனமூர் அரசியல் யாப்புக் காலத்தில் (1931-1947 ) இலங்கை இந்திய காங்கிரஸ் (1939 ) இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி (1943) . 

அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சி (1944) , ஐக்கிய தேசியக் கட்சி 
(1946) ,என்பன தோற்றம் பெற்றன . 

பாராளுமன்ற அரசாங்கம் நடைமுறையில் இல்லாதபோதும் சர்வஜன வாக்குரிமையின் அறிமுகம் கட்சியின் தோற்றத்தினை ஊக்குவித்திருந்தது . 

சுதந்திரத்தின் பின்னர் இலங்கையில் தமிழரசுக் கட்சி (F.P) (1949) , சிறிலங்கா சுதந்திரக் கட்சி (1951 ) .மக்கள் ஐக்கிய முன்னணி (M.E.P.) (1956) , இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி (பீகிங் சார்பு ) (1964 ) , மக்கள் விடுதலை முன்னணி (J.V.P) (1965) , சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் (S.L.M.C ) (1981) . மலையக மக்கள் முன்னணி (U.P.F ) (1988) போன்ற இவ்வகையான கட்சிகள் இலங்கை ஆரம்ப காலத்தில் தோற்றம் பொற்றது .

ஹபீஸ் அப்துல் முத்தலிப் (பாதிஹ்) வரிப்பத்தான்சேனை.
இச் செய்தி பற்றி உங்கள் கருத்து Vanniexpressnews@gmail.com என்ற ஈமைல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள் | Vanni Express News இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு Vanni Express News நிருவாகம் பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு கருத்துக்களை பதியவும்
Name

V.E.N.Media News,17,video,6,அரசியல்,4877,இஸ்லாமிய சிந்தனை,429,உதவி,15,உள்நாட்டு செய்திகள்,11151,கட்டுரைகள்,1394,கவிதைகள்,67,சினிமா,319,நேர்காணல்,6,மருத்துவ குறிப்பு,140,வாழ்த்துக்கள்,59,விசேட செய்திகள்,3251,விளையாட்டு,727,வினோதம்,158,வெளிநாட்டு செய்திகள்,2079,வேலைவாய்ப்பு,10,ஜனாஸா அறிவித்தல்,29,
ltr
item
Vanni Express News: இலங்கையில் அரசியல் கட்சிகளின் தோற்றம்
இலங்கையில் அரசியல் கட்சிகளின் தோற்றம்
http://4.bp.blogspot.com/-rlqEgW7pVFA/VYB6zyM4E0I/AAAAAAAAGcc/_CLUr3LH-4s/s640/ven.jpg
http://4.bp.blogspot.com/-rlqEgW7pVFA/VYB6zyM4E0I/AAAAAAAAGcc/_CLUr3LH-4s/s72-c/ven.jpg
Vanni Express News
http://www.vanniexpressnews.com/2015/06/blog-post_753.html
http://www.vanniexpressnews.com/
http://www.vanniexpressnews.com/
http://www.vanniexpressnews.com/2015/06/blog-post_753.html
true
3693659101688311337
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS CONTENT IS PREMIUM Please share to unlock Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy