மனைவி மற்றொரு நபருடன் தகாத உறவு - கொலை செய்த கணவன் கைது

ஊருபொக்கை பிரதேசத்தில் பெண் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். 

அந்தப் பிரதேசத்தில் வாடகை வீடொன்றில் வசித்து வந்த ​பெண் ஒருவரே கொலை செய்யப்பட்டிருப்பதாக பொலிஸார் தெரிவித்தனர். 

பெரலபனாதர, மில்லகஹ பிரதேசத்தைச் சேர்ந்த 27 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். 

கொலை தொடர்பில் உயிரிழந்த பெண்ணின் கணவன் சந்தேகத்தில் கைது செய்யப்பட்டிருப்பதுடன், குறித்த பெண் மற்றொரு நபருடன் தகாத தொடர்பை வைத்திருந்த காரணத்தால், கணவனால் அந்தப் பெண் கொலை செய்யப்பட்டருப்பதாக ஆரம்ப கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. 

பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
மனைவி மற்றொரு நபருடன் தகாத உறவு - கொலை செய்த கணவன் கைது மனைவி மற்றொரு நபருடன் தகாத உறவு - கொலை செய்த கணவன் கைது Reviewed by Vanni Express News on 1/20/2018 04:18:00 PM Rating: 5