அஷ்ரப்பின் மரண அறிக்கையும் ஹக்கீமின் உண்மை முகமும்..!

-எம்.எச்.எம்.இப்றாஹிம். கல்முனை

அஷ்ரப்பின் மரண அறிக்கை காணாமல்போகவில்லை மாறாக திருடப்பட்டுள்ளதாம்..!

இதனைச் செய்தவர்கள் யார்?

மறைந்த தலைவர் அஷ்ரப் அவர்கள் சதியின் மூலம் கொல்லப்பட்டாரா? அல்லது சாதாரண விபத்தின் மூலம் கொல்லப்பட்டாரா? என்று அறிந்து கொள்வதற்காக நியமிக்கப்பட்ட அன்றய ஆட்சியின் ஜனாதிபதி சந்திரிக்காவினால் நியமிக்கப்பட்ட தனிநபர் ஆணைக்குழு தனது அறிக்கையை அன்று அரசாங்கத்துக்கு சமர்ப்பித்திருந்தது.

இந்த அறிக்கையின் உண்மைத்தன்மையை வெளிக்கொண்டுவருவதற்கோ அல்லது அதனைக் கேட்டுப் பெறுவதற்கோ மு.காங்கிரஸின் தற்போதைய தலைவர் என்ற முறையில் ஹக்கீம் அவர்களோ அல்லது அந்தக்கட்சியைவைத்து லாபமடைந்தவர்களோ அந்த தலைவனின் மரண அறிக்கையை மக்கள்முன் கொண்டுவருவதற்கு எந்த முயற்சியையும் இதுவரை எடுக்கவுமில்லை, அது சம்பந்தமாக முயற்ச்சிக்கவுமில்லை.

இந்த அறிக்கையின் உண்மைத்தன்மையை மறைப்பதற்கு அரசாங்கமும், அதே போன்று மு.காங்கிரஸும் முயற்ச்சிக்கின்றது என்பதற்கு ஆதாரமாகத்தான், கடந்த செவ்வாய்கிழமை நடந்த தகவல் அறியும் ஆணைக்குழுவின் முன் ஆஜராகியிருந்த சுவடிகள் திணைக்கள பணிப்பாளர் நாயகம் கலாநிதி நதீரா ரூபசிங்கவுக்கு கடும் கண்டனத்தையும் தெறிவித்திருந்தார் தகவல் அறியும் ஆணைக்குழுவின் தலைவர் திருமதி வெல்கம அவர்கள்.
அதிலே அஷ்ரப்பின் மரண விசாரணை அறிக்கை காணாமல் போகவில்லை, மாறாக திருடப்பட்டுள்ளது. இந்த அறிக்கையின் பிரதியை எந்த வகையிலாவது கண்டுபிடித்து 27-02-2018க்கு முன் ஒப்படைக்குமாறு சுவடிகள் திணைக்களத்துக்கு கட்டளையும் பிறப்பித்திருந்தார்.

இதனைப்பார்க்கும் போது அஸ்ரப்பின் மரணம் புலிகளினாலோ அல்லது விபத்தாகவோ இருந்திருந்தால் அரசாங்கம் அதனை அந்தநேரமே பகிரங்கப்படுத்தியிருக்கும். அல்லது மு.காங்கிரசின் தலைவர் ஹக்கீமே அதனைப் பெற்று மக்களுக்கு பகிரங்கப்படுத்தியிருப்பார், அது ஏன் இன்றுவரை நடக்கவில்லை என்ற கேள்விக்கு பதில் இல்லாமல் உள்ளது.

ஆகவே ஒரு கட்சியின் தலைவராக மட்டுமல்ல ஒரு சமூகத்தின் விடிவுக்காக போராடிய தலைவர் மர்ஹும் அஷ்ரப் அவர்களுக்கு உள்ளேயும் வெளியேயும் பல எதிரிகள் இருந்திருப்பார்கள் என்பது எல்லோரும் அறிந்த உண்மைதான். ஆனால் அவரது மரணத்தின் பின் அவரை வைத்து லாபம் அடைந்தவர்கள் நிறையப்பேர் இருக்கின்றார்கள். அவர்களுக்கு இதன் மேல் அக்கறையில்லாமல் போனது ஏன் என்ற கேள்வியும் பிறக்கின்றது.

இன்று இந்த மரணத்தின் அறிக்கையைக் கேட்டு போராடும் பசீர் சேகுதாவுத் கட்சியில் இருக்கும் போது இதனை அலட்டிக்கொள்ளவில்லை இப்போதுதான் அதற்கு முயற்ச்சிக்கின்றார் எனும்போது இதற்குள் ஏதோ ஒரு உண்மை பொதிந்துள்ளது என்பது புலணாகின்றது. ஆகவே இன்றாவது அதனை கேட்பதற்கு முயற்ச்சிக்கின்றார் என்றால் அதனைப் பாராட்டாமலும் இருக்கமுடியாது. இந்தக்கட்சிக்குள் இருந்த முக்கிய புள்ளியான வசீர் இதனைக் கையில் எடுத்திருக்கின்றார் என்றால் இதற்குள் ஆயிரம் மர்மங்கள் மறைந்து கிடக்கின்றன என்பதை அறிந்து கொள்ளலாம். அதே நேரம் இந்தக் கட்சியின் மூலமாக பிரபலமான அதாவுல்லா, ஹிஸ்புல்லா,ஹசனலி,ரிசாட் பதியுதீன், இப்படி பலபேர்கள் இருக்கின்றார்கள், அதேபோன்று தலைவரின் மனைவியான பேரியல் அஷ்ரப் போன்றவர்களும் இந்த அறிக்கையை வெளிக்கொண்டுவருவதற்கு எந்தவிதமான ஆர்வத்தையும் செலுத்தவில்லை என்பதையும் நாம் அறிவோம். அதனால் இவர்களின் செயல்பாடுகளிலும் திருப்தி காணமுடியாதுள்ளது.

நான் மேற்கூறிய பிரபலங்கள் அனைவரும் அதியுயர் பதவிகளில் இருந்தவர்கள், இருந்து கொண்டும் வருபவர்கள், இவர்களினால் அந்த அறிக்கையை இலேசாக கேட்டுப்பெற்று மக்களுக்கு பகிரங்கப்படுத்தியிருக்கமுடியும். அதிலும் குறிப்பாக தற்போதய தலைவர் ஹக்கீம் அவர்கள் இதனை இலேசாக செய்திருக்கவும் முடியும். அவர்கள் இதற்கு ஏன் ஆர்வம் செலுத்தவில்லை என்ற கேள்வியை கேட்பதற்கு முஸ்லிம் மக்கள் தயாராகவும் இல்லாத நிலையில்தான் உள்ளார்கள். காரணம் இதன் பாரதூரம் பாமர முஸ்லிம்களுக்கு தெறியாததேயாகும்.

இப்படிப்பட்ட நிலையில் அஷ்ரப்பின் மரண அறிக்கை காணாமல் போகவில்லை அது திருடப்பட்டுள்ளது என்று கூறப்படுமளவுக்கு உண்மைகள் வெளியாகி வருவதைக் கண்டு நாம் சந்தோசப்படலாம். தலைவர் அஷ்ரப்பின் மரணத்துக்கு பிறகு தாருஸ்ஸலாம் சம்பந்தப்பட்ட சொத்துக்களிலும் ஊழல் செய்து லாபம் அடைந்தவர்கள் இன்றும் அந்தக்கட்சியின் உயர் பீடத்தை அலங்கரித்துக் கொண்டுதான் இருக்கின்றார்கள். அதனை மக்களும் பார்த்துக்கொண்டுதான் இருக்கின்றார்கள். ஆகவே இறைவன் இதற்க்கெல்லாம் பதில் சொல்ல துவங்கினான் என்றால் எந்தக் கொம்பனாலும் அதனை எதிர் கொள்ள முடியாது என்பதே உண்மையாகும்.
அஷ்ரப்பின் மரண அறிக்கையும் ஹக்கீமின் உண்மை முகமும்..! அஷ்ரப்பின் மரண அறிக்கையும் ஹக்கீமின் உண்மை முகமும்..! Reviewed by Vanni Express News on 1/19/2018 02:57:00 PM Rating: 5