மக்கள் எதிர்பார்த்த தேசியப்பட்டியல் நாடகம் இப்போது வெளிவந்து விட்டது

-ஜெமீல் அகமட்

பல ஆண்டுகள் மக்கள் எதிர்பார்த்த தேசியப்பட்டியல் நாடகம் இப்போது வெளிவந்து விட்டது அதனால் அம்பாறை மாவட்டத்தில் ஐக்கிய தேசிய கட்சியில் போட்டியிடும் ஹக்கிம் ஆதரவு படை எந்த பிரதேச சபையிலும் ஆட்சி அமைக்காது என்பது ஹக்கிமுக்கு தெரியும் அதனால் தேசியல்பட்டியலை அம்பாறைக்கு கொடுத்து எந்த நன்மையும் இல்லை என்பதும் அவருக்கு தெரியும் இதனால்  சல்மானின் இராஜினாமாவை தொடர்ந்து ஏற்பட்டுள்ள வெற்றிடத்துக்கு யார் என்ற கேழ்வி மக்களிடையே எழுந்துள்ளது 

கடந்த தேர்தலில் அட்டாளைச்சேனைக்கு தேசியப்பட்டியல் தருவதாக ஹக்கிம் அவர்கள் வாக்குறுதி கொடுத்து இருந்தார் அந்த வாக்குறுதி என்பது மிகவும் பெறுமதி வாய்ந்ததாக இருந்த போதும் தேர்தல் முடிந்து கிடைத்த இரு தேசியப்பட்டியல் ஆசனத்தில் ஒன்றை அட்டாளைச்சேனைக்கு வழங்காமல் பாராளுமன்றத்தின் அரைவாசி காலத்தை  ஏமாற்றியுள்ளார் அதனால் அட்டாளைச்சேனை மக்கள் இன்று ஹக்கிம் மீது அதிதிருப்தியுடன் உள்ள நிலையில் தான் சல்மானின் இராஜினாமா நடைபெற்றுள்ளது 

சல்மான் இராஜினாமா எப்போது செய்வார் என்று பலர் மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்து இருந்தனர்  அதில் முக்கியமானவர்கள் அட்டாளைச்சேனையில் இருந்தாலும் அரசியல் வட்டாரத்தில் எதிர்பார்க்கப்படும் நபராக ஹபீஸ் நசீர் அகமட் அவர்கள் இருக்கின்றார் அவர் அன்மையில் நான் விரைவில் பாராளுமன்ற உறுப்பினராகவும் ஒரு அமைச்சராகவும் வருவேன் என மக்கள் மத்தியில் வாக்குறு கொடுத்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது இதை நாம் சற்று ஆழமாக சிந்திக்க வேண்டும் 

இன்றைய அரசியல் வட்டாரத்தில் ஹக்கிமை விட அரசியல் செல்வாக்கு ஹபீஸ் நசீர் அவர்களுக்கு அதிகம் உள்ளது அதனால் அவரது காரியம் நிறைவேறும் சூழ்நிலை அதிகமாக காணப்படுகின்றன அவர் ஒரு மாகாணத்தின் தலைவராக பதவி வகித்து இன்று அரசியல் அதிகாரம் இல்லாமல் வாழ விரும்பமாட்டார் அதனால் தேசியப்பட்டியல் மூலம் பாராளுமன்றம் போக வேண்டும் என்ற பெரும் எதிர்பார்ப்புடன் இருப்பதாகவும் அதற்கான ஏற்பாடுகளை அரசியல் உயர்மட்டத்தில் செய்துவுள்ளதாக அறிய முடிகிறது 

தேர்தல் காலத்தில் செய்த இராஜினாமா என்பது வெற்றியை உறுதிப்படுத்த கைமாறும் செயலாகவே கருதவேன்டியுள்ளது அதனால் சிறுபிள்ளைக்கு காட்டும் #இனிப்பு #பண்டம் போல்  இந்த இராஜினாமா காட்டி  அட்டாளைச்சேனை ஓட்டமாவடி வன்னி போன்ற ஊர்களை ஏமாற்றி வெற்றியடைய செய்ய ஹக்கிம் போடும் நாடகமாகவும் இருக்கலாம் ஏனென்றால் கட்சியை காப்பாற்ற இரண்டு ரக்காயத் சுன்னத்த தொழுது தேசியபட்டியல் தருவதாக ஹசன் அலியிடமும் தேர்தல் ஆனைக்கு குழு தலைவரிடமும் கூறி ஏமாற்றிய சரித்திரமும் உண்டு அதை நாம் நினைவுகூறும் போது இந்த இராஜினாமா ஒரு நாடகம் என்று கூற  வேண்டும் 

அட்டாளைச்சேனைக்கு தேசியப்பட்டியல் கொடுக்கும் நோக்கம் ஹக்கிமுக்கு இருந்தால் அதை அவர் எப்போதே கொடுத்து இருப்பார் இறுதியாக கிழக்கு மாகாண சுகாதார அமைச்சை தவத்துக்கும் தேசியப்பட்டியலை அட்டாளைச்சேனை A LM நசீருக்கும் கொடுத்து இருப்பார் இப்படி நடக்காத போது அட்டாளைச்சேனைக்கு இனி கிடைக்குமா? என்பது சந்தேகம் அதிலும் அட்டாளைச்சேனையில் பலர் தேசியப்பட்டியலுக்கு போட்டி போடுவதை காரணம் காட்டி கழுவின மீனில் நழுவிய மீன் போல் ஹக்கிம் அட்டாளைச்சேனை மக்களை ஏமாற்றி வருகின்றார் அதற்கு சட்டப்பிரச்சினையும் ஒரு காரணமாக இருக்கிறது அதாவது தேசியப்பட்டியல் மூலம் பாராளுமன்றம் செல்லும் நபர் ஏற்கனவே குறித்த கட்சியில் தேர்தல் கேட்டு தோல்வியடைந்து இருக்க வேண்டும் அல்லது குறித்த கட்சியின் தேசியப்பட்டியலில் அவரது பெயர் உள்வாங்கப்பட்டு இருக்க வேண்டும் அப்படியானவர்கள் அட்டாளைச்சேனையில் இல்லாத போது எந்த சட்டத்தின் கீழ் தேசியப்பட்டியலை ஹக்கிம் கொடுக்கவுள்ளார் என்பதை  பொறுத்திருந்து பார்ப்போம் 

முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் அரசியலை பொறுத்த வரையில்  ஹக்கிமுக்கு கட்சி உறுப்பினர்கள் பிரிந்து செல்வது கட்சி தோல்வியடைவது இவைகளை பற்றி கவலையில்லை தனது தலைமையும் கௌரவமும் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதே அவரது அரசியல்  அதற்கு தடையாக இருக்கின்றவர்களை  கட்சியை விட்டு நீக்குவது தனக்கு ஆதாரவாக இருப்பவர்களுக்கு பதவி கொடுப்பது இது தான் ஹக்கிம் செய்யும் அரசியல் என்பது நாம் அறிந்த விடயம் 

அன்று  ஹக்கிமை தலையில் தூக்கி வைத்த அம்பாறை மக்கள் இன்று அவரை  கல்லெறிந்து விரட்டும் நிலை வந்துள்ளது அதனால் ஹக்கிம் இனிமேல் அம்பாறை அரசியலை நினைத்தும் பார்க்க முடியாது அதனால் இந்த தேசியப்பட்டியலை அம்பாறைக்கு நிரந்தாரமாக கொடுப்பாரா ? அல்லது இந்த தேர்தலில் மக்களை ஏமாற்றி வாக்குகளை சூரையாட அட்டாளைச்சேனைக்கு கொடுப்பாரா? என்ற சந்தேகமும் எழுகின்றது 

ஆனால் ஹக்கிம் அவர்களின்  நப்சியை பொறுத்த வரை அது பணம் பதவிக்கு ஆசைபட்ட ஒரு #மோசமான #நப்சி என்பதால் அந்த நப்சி பணம் படைத்தவர்களை தான் விரும்பும் என்பது நமக்கு தெரியும் அதனால்  தனது நன்பர் ஹபீஸ் நசீர் அவர்களுடன் தான் அது பாசமாக இருக்கும் அப்படியில்லாமல் ஹபீஸ் நசீர் அவர்களை வெறுத்தால் பல கோடிக்கணக்கான சொத்துக்கள் தலைமை பதவி என்பனவற்றை ஹக்கிம் இழாக்க நேரீடும் அதனால் அட்டாளைச்சேனை முன்னாள் அமைச்சர்  A LM நசீர் ,பழீல்BA  சட்டத்ரனி கபூர் ஆகியோர்  ஹக்கிமுக்கு முக்கியமல்ல ஹபீஸ் நசீரே முக்கிமானவராக இன்று இருக்கின்றார் அதனால் தேர்தல் காலத்தில் பாராளுமன்ற பதவி பிரமாணம் செய்ய முடியாத காரணத்தை காட்டி தேர்தல் முடிந்த பின் அட்டாளைச்சேனைக்கு பாராளுமன்ற பதவி என்ற வாக்குறுதியை கொடுத்து மக்களின் வாக்கை பெற்று தேர்தலின் பின் ஹபீஸ் நாசீர் அவர்களுக்கு தேசியப்பட்டியல் வழங்கப்படலாம்  அதன் பின் ஹக்கிம் அம்பாறைக்கு வரமாட்டார் கண்டியுடன் தனது அரசியலை செய்வார் இந்த நிலையில் ஹக்கிமை நம்பிய மக்கள்  வீதியில் நிற்கும் போது அமைச்சர் றிசாத் அவர்கள் அம்பாறை மக்களை பாதுகாப்பார் இது தான் நடக்க போகின்றது எனவே தேசியப்பட்டியல் என்பது ஹக்கிம் நடத்தும் இறுதி நாடகம் என்பதை அம்பாறை மக்கள் மறந்துவிடக் கூடாது
மக்கள் எதிர்பார்த்த தேசியப்பட்டியல் நாடகம் இப்போது வெளிவந்து விட்டது மக்கள் எதிர்பார்த்த தேசியப்பட்டியல் நாடகம் இப்போது வெளிவந்து விட்டது Reviewed by Vanni Express News on 1/19/2018 03:23:00 PM Rating: 5