தேர்தல் தொடர்பில் 241 முறைப்பாடுகள் - வேட்பாளர்கள் 21 பேர் கைது

நடைபெற உள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தல் சம்பந்தமாக இதுவரை 241 முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாக பொலிஸ் தலைமையகம் கூறியுள்ளது. 

168 தேர்தல் முறைப்பாடுகளும் தேர்தல் சட்ட மீறல்கள் சம்பந்தமாக 73 முறைப்பாடுகளும் அதில் உள்ளடங்குவதாக பொலிஸ் தலைமையகம் கூறியுள்ளது. 

கடந்த 24 மணித்தியாலங்களுக்குள் பேராதனை, எம்பிலிப்பிட்டிய, நிட்டம்புவ, சேருநுவர, களுத்துறை வடக்கு, மீப்பே மற்றும் பேருவளை ஆகிய பொலிஸ் நிலையங்களில் 07 முறைப்பாடுகள் கிடைத்துள்ளன. 

அதேவேளை கடந்த டிசம்பர் 09ம் திகதி முதல் இன்று வரையான காலத்திற்குள் தேர்தல் முறைப்பாடுகளுக்கு அமைவாக 197 பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர்களில் 21 பேர் இம்முறை தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் என்று பொலிஸ் தலைமையகம் கூறியுள்ளது.
தேர்தல் தொடர்பில் 241 முறைப்பாடுகள் - வேட்பாளர்கள் 21 பேர் கைது தேர்தல் தொடர்பில் 241 முறைப்பாடுகள் - வேட்பாளர்கள் 21 பேர் கைது Reviewed by Vanni Express News on 1/19/2018 11:26:00 PM Rating: 5