விகாரையில் தீப்பரவல் - தீயினை அணைக்க முற்பட்ட பிக்கு வைத்தியசாலையில்

மதுகம - யடதொல அளுத்கம்கொட விகாரையில் இன்று அதிகாலை தீப்பரவல் ஏற்பட்டுள்ளது.

அதிகாலை 2 மணியளவில் ஏற்பட்ட இந்த தீப்பரவலில் விகாரையின் பிக்குகள் தங்குமிடம் கடுமையாக சேதமடைந்துள்ளதாக வெலிபென்ன காவற்துறையினர் தெரிவித்தனர்.

தீயினை அணைக்க முற்பட்ட பிக்கு ஒருவர் தீக்காயங்களுக்கு உள்ளான நிலையில் , களுத்துறை - நாகொடை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
விகாரையில் தீப்பரவல் - தீயினை அணைக்க முற்பட்ட பிக்கு வைத்தியசாலையில் விகாரையில் தீப்பரவல் - தீயினை அணைக்க முற்பட்ட பிக்கு வைத்தியசாலையில் Reviewed by Vanni Express News on 1/20/2018 03:01:00 PM Rating: 5