வீட்டிலிருந்த சிறுமியை கடத்திச் சென்று துஷ்பிரயோகம் செய்தவருக்கு கிடைத்த தண்டனை

யாழ். பருத்தித்துறையில் சிறுமி ஒருவரை கடத்திச்சென்று பாலியல் வன்முறைக்கு உட்படுத்திய இளைஞனுக்கு 05 வருடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட 02 வருட கடூழிய சிறைதண்டனை விதித்து நீதிபதி மா. இளஞ்செழியன் இன்று தீர்ப்பளித்தார். 

குறித்த வழக்கு யாழ். மேல் நீதிமன்றில் நீதிபதி மா.இளஞ்செழியன் முன்னிலையில் இன்றைய தினம் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. 

இதன்போது குற்றவாளிக்கு 05 வருடங்களுக்கு ஒத்தி வைக்கப்பட்ட 02 வருடங்கள் கடூழியச் சிறைத் தண்டனையும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு 25,000 ரூபா அபராதமும், அபராதத்தை செலுத்த தவறின் மேலும் 03 மாதங்கள் சிறைத்தண்டனை அனுபவிக்க வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

கடந்த 2011 ஆம் ஆண்டு யாழ். பருத்தித்துறைப் பகுதியில் வீட்டில் இருந்த சிறுமையை கடத்திச்சென்று பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் ஒருவர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு பின்னர் அவர் பிணையில் விடுவிக்கப்பட்டார். 

இதனையடுத்து சம்பவம் தொடர்பான வழக்கு சட்டமா அதிபர் திணைக்களத்தால் யாழ். மேல் நீதிமன்றுக்கு மாற்றப்பட்டது. 

இந்த வழக்கில் குற்றத்தை ஒப்புக்கொண்ட நபருக்கு சிறுமியை கடத்திச் சென்றமை மற்றும் பாலியல் துன்புறுத்தல்களை மேற்கொண்டமைக்கு எதிராக 05 வருடங்களுக்கு ஒத்தி வைக்கப்பட்ட 02 வருட கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 
வீட்டிலிருந்த சிறுமியை கடத்திச் சென்று துஷ்பிரயோகம் செய்தவருக்கு கிடைத்த தண்டனை வீட்டிலிருந்த சிறுமியை கடத்திச் சென்று துஷ்பிரயோகம் செய்தவருக்கு கிடைத்த தண்டனை Reviewed by Vanni Express News on 1/20/2018 03:18:00 PM Rating: 5