கடந்த அரசாங்கத்தின் உயர் மட்ட பதவிகளில் இருந்த பலர் ஊழல் - ஜனாதிபதி தெரிவிப்பு

கடந்த அரசாங்கத்தின் உயர் மட்ட பதவிகளில் இருந்த பலர் ஊழல் மோசடிகளில் ஈடுபட்டிருந்ததாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

வெல்லவாயவில் இன்று இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும்போது ஜனாதிபதி இதனை தெரிவித்துள்ளார்.

பாரிய ஊழல் மோசடிகள், அரச வளங்கள், சிறப்புரிமைகள் மற்றும் அதிகார துஷ்பிரயோகங்கள் தொடர்பாக விசாரணை செய்வதற்காக நியமிக்கப்பட்ட ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் இறுதி அறிக்கையில் இதற்கான சான்றுகள் இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஊழல் குற்றச்சாட்டுக்களில் இருந்து தங்களை விடுவித்துக்கொள்வதற்கே ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு எதிராக புதிய கட்சியொன்றை உருவாக்கி, 2015ஆம் ஆண்டுக்கு பின்னோக்கிச் செல்வோம் என்று அவர்கள் குறிப்பிடுவதாக ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

மக்கள் பணத்தை திருடிய அனைவருக்கும் உரிய தண்டனையை பெற்றுக்கொடுத்து, அந்த பணத்தை மீண்டும் அறவிடும் பொறுப்பை நிறைவேற்றுவதாக ஜனாதிபதி இதன்போது குறிப்பிட்டார்.

அத்துடன், மத்திய வங்கியில் மோசடிகள் இடம்பெற்றுள்ளதாகவும் சிலர் அதனுடன் தொடர்புபட்டுள்ளதாகவும் முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுக்களுக்கு அப்பால், மத்திய வங்கியில் கடந்த காலங்களில் பேரனர்த்தங்கள் இடம்பெற்றுள்ளதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
கடந்த அரசாங்கத்தின் உயர் மட்ட பதவிகளில் இருந்த பலர் ஊழல் - ஜனாதிபதி தெரிவிப்பு கடந்த அரசாங்கத்தின் உயர் மட்ட பதவிகளில் இருந்த பலர் ஊழல் - ஜனாதிபதி தெரிவிப்பு Reviewed by Vanni Express News on 1/20/2018 03:47:00 PM Rating: 5