நாட்டை கட்டியெழுப்ப உள்ளூராட்சி சபைகளின் அதிகாரத்தை ஐதேக வுக்கு வழங்குங்கள்

நாட்டை கட்டியெழுப்பும் ஐக்கிய தேசிய கட்சிக்கு உள்ளூராட்சி அதிகாரத்தையும் வழங்குமாறு பிரதமர் ரணில் விக்ரமசிங்க கூறியுள்ளார். 

உள்ளூராட்சி சபைத் தேர்தலை முன்னிட்டு கண்டியில் ​நேற்று இடம்பெற்ற ஐக்கிய தேசிய கட்சியால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த முதலாவது மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே பிரதமர் இதனைக் கூறியுள்ளார். 

புதிய அரசாங்கம் ஆட்சிக்கு வந்த பின்னர் கப்பல் வராத துறைமுகத்தை பொறுப்பேற்றுக் கொண்டதாகவும், இன்று அது இயங்கும் நிலைக்கு மாற்றப்பட்டிருப்பதாகவும், அதனூடாக 110 கோடி டொலர் வருமானம் கிடைத்திருப்பதாகவும் அவர் கூறினார். 

எமது பலத்தை உறுதி செய்வதற்காக கண்டி மா நகர சபையையும் ஏனைய உள்ளூராட்சி சபைகளினதும் அதிகாரத்தை ஐக்கிய தேசிய கட்சிக்கு வழங்குமாறு பிரதமர் ரணில் விக்ரமசிங்க கூறியுள்ளார்.
நாட்டை கட்டியெழுப்ப உள்ளூராட்சி சபைகளின் அதிகாரத்தை ஐதேக வுக்கு வழங்குங்கள் நாட்டை கட்டியெழுப்ப உள்ளூராட்சி சபைகளின் அதிகாரத்தை ஐதேக வுக்கு வழங்குங்கள் Reviewed by Vanni Express News on 1/19/2018 02:38:00 PM Rating: 5