பெண் மற்றும் குழந்தையை வெட்டிய பின் தன் உயிரை மாய்த்த நபர்

-பாறுக் ஷிஹான்

நபர் ஒருவர்  பெண்  மற்றும் மூன்று வயதான  பெண்குழந்தை ஆகியோரை  வெட்டிய பின்னா்  தனது  உயிரை மாய்த்துக்கொண்ட சம்பவம் ஒன்று யாழ்  வண்ணார் பண்ணை வட மேற்கு பத்திரகாளி அம்மன் கோவில் வீதியில்  இன்று(19) காலை இடம்பெற்றது.

இதன் போது  வெட்டுக்காயங்களுக்கு உள்ளான குழந்தை  உயிரிழந்துள்ளதுடன் பெண்  படுகாயமடைந்த நிலையில்  யாழ். போதனா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

சம்பவம் தொடர்பாக தெரியவருவதானது 

இன்று காலை குறித்த வீட்டில் தாயும் அவருடைய இளைய மகனுடைய மகளும்  இருந்துள்ளனர். அப்போது அவருடைய மூத்த மகன் ஈஸ்வர் என்பவர் வீட்டில் இருந்த தாய் மற்றும் பெண் குழந்தை மீது கொடூரமாக கோடாரியால் வெட்டி தாக்குதலை மேற்கொண்டுள்ளார்.

சம்பவ இடத்திலேயே குழந்தை உயிரிழந்துள்ளதுடன் தாய்  கழுத்து மற்றும் தலையில் படுகாயமடைந்த நிலையில் வைத்திய சாலை அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்

மேலும் குறித்த தாக்குதலை மேற்கொண்ட  ஈஸ்வர்  தானும் தற்கொலை செய்து கொண்டுள்ளார். இவர் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்துள்ளார்

இதன் போது   தனுசன் நிக்சையா (03) ஈஸ்வர் (33) ஆகியோரே இந்த சம்பவத்தில் உயிரிழந்ததுடன் பலமேஷ்வரி (55) என்பவர் படுகாயமடைந்துள்ளார்

இச்சம்பவம் தொடர்பாக யாழ்ப்பாணம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
பெண் மற்றும் குழந்தையை வெட்டிய பின் தன் உயிரை மாய்த்த நபர் பெண் மற்றும் குழந்தையை வெட்டிய பின் தன் உயிரை மாய்த்த நபர் Reviewed by Vanni Express News on 1/19/2018 03:33:00 PM Rating: 5