பொதுஜன பெரமுனவின் மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது

மகரகம நகர சபைத் தேர்தலில் போட்டியிடுவதற்காக தாக்கல் செய்யப்பட்ட வேட்புமனு நிராகரிக்கப்பட்டமைக்கு எதிராக ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவினால் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு நிராகரிக்கப்பட்டுள்ளது. 

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்கள் 06 பேர் இணைந்து இந்த மனுவை தாக்கல் செய்திருந்தனர். 

இதுதொடர்பான வழக்கு இன்று உச்ச நீதிமன்றத்தில் பிரதம நீதியரசர் பிரியசாத் டெப் உள்ளிட்ட மூவரடங்கிய நீதியரசர்களால் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. 

இதன்போது குறித்த மனுவை விசாரணை செய்யாமல் நிராகரிப்பதற்கு நீதியரசர்கள் தீர்மானித்ததாக அத தெரண நீதிமன்ற செய்தியாளர் கூறினார். 

மகரகம நகர சபைக்கு தாக்கல் செய்யப்பட்ட வேட்பு மனுவில் பெண் வேட்பாளர் ஒருவரின் பெயருக்கு பக்கத்தில் ஆண் என குறிப்பிடப்பட்டிருந்ததால் அந்த வேட்பு மனு நிராகரிக்கப்பட்டிருந்தது.
பொதுஜன பெரமுனவின் மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது பொதுஜன பெரமுனவின் மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது Reviewed by Vanni Express News on 1/19/2018 03:48:00 PM Rating: 5