கொள்ளுபிட்டியில் சீன உணவகத்தில் உயிருடன் வைக்கப்பட்டிருந்த அரிய விலங்கு மீட்டுள்ளது

கொள்ளுபிட்டி பிரதேசத்தில் அமைந்துள்ள சீன உணவகத்தில் குளிர்சாதன பெட்டியில் உயிருடன் வைக்கப்பட்டிருந்த எறும்புண்ணி என அழைக்கப்படும் அலுங்கு ஒன்றை காவல்துறையினர் மீட்டுள்ளனர்.

காவல்துறை அவசர தொலைபேசி இலக்கத்திற்கு வழங்கப்பட்ட தகவலுக்கு அமைய இன்று இந்த சுற்றிவளைப்பு இடம்பெற்றுள்ளது.

சம்பவம் தொடர்பில் சீன நாட்டவரான பிரதான சமையல் கலை நிபுணர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை குறிப்பிட்டுள்ளது.

உயிருடன் மீட்கப்பட்டுள்ள இந்த அலுக்கு நான்கு அடி நீளம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபர் இன்று நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.
கொள்ளுபிட்டியில் சீன உணவகத்தில் உயிருடன் வைக்கப்பட்டிருந்த அரிய விலங்கு மீட்டுள்ளது கொள்ளுபிட்டியில் சீன உணவகத்தில் உயிருடன் வைக்கப்பட்டிருந்த அரிய விலங்கு மீட்டுள்ளது Reviewed by Vanni Express News on 2/05/2018 10:55:00 PM Rating: 5