ஊஞ்சலில் விளையாடின்கொண்டிருந்த 9 வயது சிறுமி கழுத்தில் கயிறு இறுகி பலி

யாழ்ப்பாணம் கோப்பாய் பகுதியில் சிறுமி ஒருவர் ஊஞ்சலில் விளையாடின்கொண்டிருந்த போது கழுத்தில் கயிறு இறுகியதால் சுவாசத்தடை ஏற்பட்டு உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவம் நேற்றைய தினம் இடம்பெற்றதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்தார்.

குறித்த பகுதியை சேர்ந்த 9 வயதுடைய சிவநேசன் அக்சயனி என்ற சிறுமியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

அக்சனியாவை நித்திரை செய்துவிட்டு பெற்றோர் சந்தைக்கு சென்றுள்ளனர்.

சந்தைக்கு சென்று திரும்பி வருகையில் குறித்த சிறுமி கட்டிலில் காணப்படாமையை தொடரந்து பெற்றோர் தேடியுள்ளனர்.

இதன்போது கழுத்து பகுதி இறுகிய நிலையில் ஊஞ்சலில் காணப்பட்டுள்ளார்.

இதன்போது பெற்றோர் சிறுமியை யாழ் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு சென்றுள்ளனர்.

எனினும் சிறுமி கொண்டு வருவதற்கு முன்னரே உயிரிழந்து விட்டார் என வைத்தியர்களால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில் சிறுமியின் சடலத்தினை உடற்கூற்று பரிசோதனைக்காக வைத்தியசாலையில் வைத்துள்ள நிலையில் யாழ் காவல் துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
ஊஞ்சலில் விளையாடின்கொண்டிருந்த 9 வயது சிறுமி கழுத்தில் கயிறு இறுகி பலி ஊஞ்சலில் விளையாடின்கொண்டிருந்த 9 வயது சிறுமி கழுத்தில் கயிறு இறுகி பலி Reviewed by Vanni Express News on 2/05/2018 03:23:00 PM Rating: 5