மஸ்தானின் அழைப்பை ஏற்று நாளை வவுனியா செல்லும் ஜனாதிபதி

-ஊடகப்பிரிவு

2018\02\05 நாளை வவுனியா யங்ஸ்டார் விளையாட்டுக் கழக மைதானத்தில் நடைபெறவுள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் வன்னி மாவட்ட மாநாட்டுக்காக வவுனியா நகரம் விழாக்கோலம் பூண்டுள்ளது.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் வன்னிமாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் மாவட்ட அபிவிருத்திக் குழு இணைத் தலைவருமான கெளரவ மஸ்தான் காதர் அவர்களின் அழைப்பை ஏற்று ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவரான ஜனாதிபதி அதிமேதகு மைத்திரிபால சிறிசேன அவர்கள் வருகை தரவுள்ளதால் நகரின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. 

வன்னி மாவட்டத்தில் உள்ளூராட்சி மன்றங்களுக்கு போட்டியிடும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் வேட்பாளர்கள் ஆதரவாளர்கள் தொண்டர்கள் என பெருந்தொகையான மக்கள் மேற்படி மாநாட்டில் கலந்து கொள்வார்கள் என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் வன்னிமாவட்ட கொள்கைபரப்பு பணியகம் தெரிவித்துள்ளது.

இதே வேளை அனைத்து வன்னிமாவட்ட பொதுமக்களையும் மேற்படி மாநாட்டில் கலந்து கொள்ளுமாறு வன்னிமாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அல்ஹாஜ் காதர் மஸ்தான் அழைப்பு விடுத்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது. 
மஸ்தானின் அழைப்பை ஏற்று நாளை வவுனியா செல்லும் ஜனாதிபதி மஸ்தானின் அழைப்பை ஏற்று நாளை வவுனியா செல்லும் ஜனாதிபதி Reviewed by Vanni Express News on 2/04/2018 11:49:00 PM Rating: 5