பிரித்தானிய இளவரசர் எட்வர்ட் உள்ளிட்ட வெளிநாட்டு பிரதிநிதிகள் ஜனாதிபதியை சந்தித்தார்கள்

70 ஆவது சுதந்திர தின கொண்டாட்டத்தில் பங்குபற்றுவதற்காக இலங்கை வந்திருந்த பிரித்தானிய இளவரசர் எட்வர்ட் உள்ளிட்ட வெளிநாட்டு பிரதிநிதிகள் ஜனாதிபதியை நேற்று (04) ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்து சந்தித்துள்ளனர். 

இதன்போது, சுதந்திரத்திற்குப் பின்னர் பிரித்தானியாவுக்கும் இலங்கைக்குமிடையிலான உறவுகள் சிறப்பாக உள்ளதாகக் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார். 

பிரித்தானிய அரசாங்கத்தின் அனுசரனையின் கீழ் நாட்டில் நிர்மாணிக்கப்பட்ட மின் உற்பத்தி நிலையமான விக்டோரியா நீர்த்தேக்கம் இன்று இலங்கையின் தேசிய பொருளாதாரத்திற்கு முக்கிய பங்களிப்பை வழங்கிவருவதாகவும் அவர் தெரிவித்தார். 

இதனை தொடர்ந்து, கருத்துத் தெரிவித்த இளவரசர் எட்வர்ட், இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ள கிடைத்ததையிட்டு மகிழ்ச்சியடைவதாக தெரிவித்தார்.

அத்துடன், இங்கிலாந்துக்கும் இலங்கைக்குமிடையிலான கல்வித்துறையில் விசேட தொடர்புகள் உள்ளதாக அவர் தெரிவித்தார். 

இந்த வருடம் பிரித்தானியாவில் நடைபெறும் பொதுநலவாய நாடுகள் மாநாட்டில் மீண்டும் சந்திப்பதற்கும் அவர் இதன்போது இணக்கம் வெளியிட்டார்.
பிரித்தானிய இளவரசர் எட்வர்ட் உள்ளிட்ட வெளிநாட்டு பிரதிநிதிகள் ஜனாதிபதியை சந்தித்தார்கள் பிரித்தானிய இளவரசர் எட்வர்ட் உள்ளிட்ட வெளிநாட்டு பிரதிநிதிகள் ஜனாதிபதியை சந்தித்தார்கள் Reviewed by Vanni Express News on 2/05/2018 03:52:00 PM Rating: 5