கொழும்பில் நடந்த சோக சம்பவம்

கொழும்பில், வழிபாட்டு தலமொன்றிற்கு அருகாமையில் குழந்தை ஒன்றுடன் யாசகத்தில் ஈடுபட்டு வந்த பெண்ணொருவரை சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையினர் பொறுப்பேற்றுள்ளனர்.

சிறுவர் பாதுகாப்பு அதிகார சபைக்கு கிடைக்கபெற்ற முறைப்பாடு ஒன்றுக்கமைய அவர்கள் பொறுப்பேற்கப்பட்டுள்ளனர்.

33 வயதுடைய பெண்ணொருவரும் இரண்டரை வயதுடைய குழந்தை ஒன்றுமே இவ்வாறு பொறுப்பேற்கப்பட்டதாக சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் மரினி டி லிவேரா தெரிவித்துள்ளார்.

குறித்த பெண் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் தொழில் நிமித்தம் வெளிமாவட்டத்தில் இருந்து கொழும்புக்கு வந்ததாக ஆரம்ப விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.
கொழும்பில் நடந்த சோக சம்பவம் கொழும்பில் நடந்த சோக சம்பவம் Reviewed by Vanni Express News on 2/05/2018 10:42:00 PM Rating: 5