மருமகளுடன் சேர்ந்து மாமியார் வித்தியாசமான முறையில் கொள்ளை சம்பவம்


எமது நாட்டில் கொள்ளையர்கள் நாம் பல வடிவில் பார்த்துள்ளோம் ஆனால் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்களை உறுப்பினர்களாக கொண்ட கொள்ளையர்கள் குழுவினை அவதானித்ததுண்டா....?

காலி எல்பிட்டி கனேமுல்லை பகுதியில்தான் இவர்களின் வசிப்பிடம் அமைந்துள்ளது.

59 வயதுடைய குடும்ப பெண், அவரின் மூன்றாவது மகன் மற்றும் மருமகள் ஆகியோரை நினைவில் வைத்திருங்கள்.

நடந்த உண்மை சம்பவம் ஒன்றை பார்க்கலாம்.

நாட்டிலுள்ள அனைத்து சிறப்பு சந்தைகளுக்கும் பொருட்கள் வாங்குவதற்காக செல்வதை போன்று போலி வேடம் தரித்த 59 வயதுடைய பெண் மற்றும் இளம் வயதுடைய அவரது மருமகள் ஆகிய இருவரும் மிகவும் சூட்சமமான முறையினை பணக்கொள்ளைக்காக கையாண்டுள்ளனர்.

ஒருவர் சந்தை தொகுதிக்குள் சென்று விடுவார். அவர்தான் 59 வயதுடைய கொள்ளை குழுவின் அரசி. மருமகன் வெளியில் நின்றுக்கொண்டு வேவு பார்ப்பாள். எந்த பெண் அதிக பணத்துடன் வருகின்றாளோ அதனை அவளின் அனுபவம் கொண்டு தீர்மானிப்பாள்.

அவளை பின்தொடர்வாள் மருமகள்... ஏற்கனவே சந்தை தொகுதிக்குள் காத்திருக்கும் 59 வயதுடைய பெண் மருமகளை பின்தொடர்வாள்.

பொருட்களை வாங்குவதற்கு வந்த பெண் ஏதாவது ஒரு இடத்தில் கவனயீனமாக செயற்படுகின்றாரோ அந்த இடத்தினை சாதகமாக பயன்படுத்தி ஒருவரை ஒருவர் தெரியாமல் அதாவது தவறுதலாக மோதிக்கொள்வது போன்று மூவரும் மோதிக்கொள்வார்கள்.

இந்த சந்த்தர்ப்பத்தில் பொருட்கள் வாங்க வந்த பெண்ணின் பணப்பை வெட்டப்பட்டு விடும். மூவரும் ஒருவருக்கொருவர் தெரியாதவர்களை போன்று வெளியேறி விடுவார்கள்.

இவ்வாறு அரங்ககேற்றப்பட்ட ஒரு கொள்ளைச்சம்பவமே நேற்று முன்தினம் காலியில் நடைபெற்றுள்ளது.

பாதுகாப்பு கெமரா மூலம் அறிந்துக்கொண்ட காவலாளிகள் குறித்த இருவரையும் காவல் துறையினருக்கு இனங்காட்டியதை தொடர்ந்து கைது செய்யப்பட்டுள்ளனர்.

கொள்ளைடிக்கப்படுகின்ற பணத்தொகையில் 3:1 என்ற விகிதத்தில் மூவரும் பகிர்ந்துக்கொள்கின்றனர் என விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.

59 வயதுடைய குறித்த பெண்ணின் மகன் தலைமறைவாகியுள்ளதாகவும், அவரை கைது செய்ய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.
மருமகளுடன் சேர்ந்து மாமியார் வித்தியாசமான முறையில் கொள்ளை சம்பவம் மருமகளுடன் சேர்ந்து மாமியார் வித்தியாசமான முறையில் கொள்ளை சம்பவம் Reviewed by Vanni Express News on 2/05/2018 04:44:00 PM Rating: 5