பயிற்சி பெற்ற 19 இராணுவத்தினர் வவுனியா வைத்தியசாலையில் அனுமதி

வவுனியாவில் உள்ள பம்பாமடுவ இராணுவப் பயிற்சிப் பள்ளியில் பயிற்சி பெற்ற 19 இராணுவத்தினர் வவுனியா வைத்தியசாலையில் இன்று (22) அனுமதிக்கப்பட்டனர். 

இராணுவத் தலைமையகத்தின் பயிற்சிப் பள்ளியில் 50 க்கும் அதிகமான வீரர்கள் கலந்து கொண்ட இப்பயிற்சியின் போது, ​​ உடல் நிலை பாதிப்பிற்கு உள்ளான நிலையில் 19 இராணுவ வீரர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். 

இந்த உடல்நிலை பாதிப்பு இவர்களுக்கு பயிற்சியின் போது குடிப்பதற்கு நீர் வழங்கப்படாமையால் ஏற்பட்டு இருக்கலாம் எனவும் இப்பகுதியில் நிலவும் சூடான வானிலை காரணமாக இந்த நிலைமை ஏற்பட்டு இருக்கலாம் எனவும் சந்தேகிக்கப்படுகிறது 

இவ்வாறு பாதிக்கப்பட்ட வீரர்கள் இராணுவத்தின் 25 வது படைப்பிரிவின் கீழ் பயிற்சி பெற்ற வீரர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது 
பயிற்சி பெற்ற 19 இராணுவத்தினர் வவுனியா வைத்தியசாலையில் அனுமதி பயிற்சி பெற்ற 19 இராணுவத்தினர் வவுனியா வைத்தியசாலையில் அனுமதி Reviewed by Vanni Express News on 4/22/2018 10:27:00 PM Rating: 5