வேன் ஒன்று வீதியை விட்டு விலகி 100 அடி பள்ளத்தில் பாய்ந்து விபத்து

-க.கிஷாந்தன்

லிந்துலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தலவாக்கலை டயகம பிரதான வீதியில் லிந்துலை நாகசேனை பகுதியில் இன்று மாலை 3 மணியளவில் வேன் ஒன்று வீதியை விட்டு விலகி 100 அடி பள்ளத்தில் பாய்ந்து விபத்துக்குள்ளாகியதில் அதில் பயணஞ் செய்த சாரதியும், மற்றொருவரும் கடும்காயங்களுக்குள்ளாகி லிந்துலை பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

லிந்துலை பகுதியிலிருந்து அக்கரப்பத்தனை பசுமலை பகுதியில் அமைந்துள்ள தனியார் தொழிற்சாலையில் பணிபுரியும் ஊழியர்களுக்கு மதிய உணவுகளை கொண்டு சென்று இறக்கிவிட்டு மீண்டும் லிந்துலையை நோக்கி வரும் பொழுதே குறித்த வேன் இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.

இவ்விபத்தில் காயமடைந்த இருவரும் லிந்துலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, அதில் ஒருவர் நுவரெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.

தூக்க கலக்கம் ஏற்பட்டதனால் வாகன சாரதிக்கு வாகனத்தை கட்டுப்படுத்த முடியாததன் போனமையினால் இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

இவ்விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை லிந்துலை பொலிஸார் தொடர்ந்துள்ளமை குறிப்பிடதக்கது.
வேன் ஒன்று வீதியை விட்டு விலகி 100 அடி பள்ளத்தில் பாய்ந்து விபத்து வேன் ஒன்று வீதியை விட்டு விலகி 100 அடி பள்ளத்தில் பாய்ந்து விபத்து Reviewed by Vanni Express News on 4/18/2018 05:07:00 PM Rating: 5