பஸ் விபத்து - 29 பேர் வைத்தியசாலையில் அனுமதி

-க.கிஷாந்தன்

ஹட்டனிலிருந்து ஒல்டன் வழியாக சாமிமலை நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான  பஸ் ஒன்று ஹட்டன் நோர்வூட் பிரதான வீதியில் நோர்வூட் தியசிரிகம நிவ்வெளி பகுதியில் குடைசாய்ந்து விபத்துக்குள்ளாகியதில் 29 பேர் காயம்பட்டு டிக்கோயா கிளங்கன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

ஹட்டன் நகரத்திலிருந்து பயணிகளை ஏற்றிக் கொண்டு சாமிமலை பகுதிக்கு சென்ற குறித்த பஸ் இன்று மாலை 04.00 மணியளவில் பாதையை விட்டு விலகி குடைசாய்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

பஸ்ஸில் ஏற்பட்ட இயந்திர கோளாறு காரணமாகவே இந்த விபத்து நேர்ந்ததாக நேரடி விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.

இவ்விபத்தில் காயமடைந்த 29 பேரும் டிக்கோயா ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.

29 பேரில் 4 பேர் பெண்களும், 2 சிறுவர்களும், 23 ஆண்களும் அடங்குவதாக வைத்தியசாலை வட்டாரங்கள் மேலும் தெரிவித்தன.

இவ்விபத்து தொடர்பில் நோர்வூட் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
பஸ் விபத்து - 29 பேர் வைத்தியசாலையில் அனுமதி பஸ் விபத்து - 29 பேர் வைத்தியசாலையில் அனுமதி Reviewed by Vanni Express News on 4/23/2018 10:21:00 PM Rating: 5