அநுராதபுரம் ஸாஹிரா கல்லூரியின் பிறையொளி பொன்விழா

-அஸீம் கிலாப்தீன்


இம்மாதம் 27 ஆம் திகதி வெளியாகின்றது அநுராதபுரம் ஸாஹிரா கல்லூரியின் பிறையொளி பொன்விழா மலர்

பேராசிரியர்கள் சந்திரசேகரம், எம்.எஸ்.எம்.அனஸ், விரிவுரையாளர் மொஹிதீன் எம் அலிகான் உட்பட அநுராதபுரம் ஸாஹிரா கல்லூரியின் ஆசிரியர்களின் ஆக்கங்களுடன் இக்கல்லூரியின் ஐம்பது வருட கால வரலாற்றுப் பெட்டகமாக 206 பக்கங்களுடன் இம்மாதம் 27 ஆம் திகதி ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன பிரதம அதிதியாக கலந்து கொள்ளும் இம்மலர் பொன்விழா வைபவத்தில் வெளியிடப்படவுள்ளது. 


CTC குழும நிறுவனங்களின் ஸ்தாபகர் அல்ஹாஜ் எச்.எஸ்.ஏ .முத்தலிப் ,உமராஸ் நிறுவன உரிமையாளர் அல்ஹாஜ் ஏ .எம்.ஜெமீல் ஆகியோரின் அனுசரணையுடன் இந்த பொன்விழா மலர் தயாரிக்கப்பட்டு உள்ளது.
அநுராதபுரம் ஸாஹிரா கல்லூரியின் பிறையொளி பொன்விழா அநுராதபுரம் ஸாஹிரா கல்லூரியின் பிறையொளி பொன்விழா Reviewed by Vanni Express News on 4/24/2018 03:48:00 PM Rating: 5