கேரளா கஞ்சா மற்றும் ஹெரோயின் போதை பொருள் வைத்திருந்த ஏழு பேர் கைது

-க.கிஷாந்தன்

ஹட்டன் மற்றும் கொட்டகலை பகுதிகளில் கேரளா கஞ்சா மற்றும் ஹெரோயின் போதை பொருள் வைத்திருந்த ஏழு பேர் நேற்று மாலை கைது செய்யப்பட்டதாக ஹட்டன் கலால் திணைக்கள அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

ட்டன் குடாகம, கொட்டகலை, டிக்கோயா ஆகிய பகுதிகளில் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கைகளின் போது கேரள கஞ்சா 5200 மில்லிகிராமுடன் 02 பேரும், ஹெரோயின் போதை பொருள் 1220 மில்லி கிராமுடன் 05 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்கள் கொட்டகலை, ட்டன், டிக்கோயா, குடாகம உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என்றும் இவர்கள் இன்று ட்டன் நீதவான் முன்னிலையில் ஆஜர் செய்யப்படவுள்ளதாகவும் அதிகாரி மேலும் தெரிவித்தார்.
கேரளா கஞ்சா மற்றும் ஹெரோயின் போதை பொருள் வைத்திருந்த ஏழு பேர் கைது கேரளா கஞ்சா மற்றும் ஹெரோயின் போதை பொருள் வைத்திருந்த ஏழு பேர் கைது Reviewed by Vanni Express News on 4/24/2018 04:00:00 PM Rating: 5