ஜனவரி 1 முதல் ஏப்ரல் 20 வரை ஆயுதங்கள் வைத்திருந்த 30 பேர் கைது

-மினுவாங்கொடை நிருபர் 

நாடளாவிய ரீதியில் ஜனவரி முதலாம் திகதி முதல் ஏப்ரல் 20 ஆம் திகதி வரை மேற்கொள்ளப்பட்ட சுற்றி வளைப்புத் தேடுதல் நடவடிக்கைகளின்போது, துப்பாக்கி மற்றும் கைக்குண்டுகளை தம்வசம் வைத்திருந்த 30 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக, பொலிஸ் விசேட தேடுதல் நடவடிக்கைப் பிரிவு தெரிவித்துள்ளது.

இதில் கம்பஹா, கொழும்பு ஆகிய மாவட்டங்களிலேயே 15 க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டிருப்பதாகவும் பொலிஸ் பிரிவு சுட்டிக்காட்டியுள்ளது.

இத்தேடுதல் நடவடிக்கைகளின்போது, 5 கைக்குண்டுகள், 2 "ரீ - 56" ரகத் துப்பாக்கிகள், 151 துப்பாக்கி ரவைகள் கைப்பற்றப்பட்டுள்ளன,

அத்துடன், கூரிய ஆயுதங்கள் 7, ரிவோலர் 5, பிஸ்தோல் 1, மெகசின் 1, ரிவோலர் பிஸ்தோல்களுக்காகப் பயன்படுத்தப்படும் ரவைகள் 380 மற்றும் பல்வேறு துப்பாக்கிகளுக்காகப் பயன்படுத்தப்படும் ரவைகள் 810 போன்றவைகளும் குறித்த நபர்களிடமிருந்து கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் பிரிவு குறிப்பிட்டுள்ளது.
ஜனவரி 1 முதல் ஏப்ரல் 20 வரை ஆயுதங்கள் வைத்திருந்த 30 பேர் கைது ஜனவரி 1 முதல் ஏப்ரல் 20 வரை ஆயுதங்கள் வைத்திருந்த 30 பேர் கைது Reviewed by Vanni Express News on 4/25/2018 10:52:00 PM Rating: 5