ஜன்னல் ஜாக்கட்டை விட ஹபாயா சிறந்தது !!

-நூறுல் ஹுதா உமர்

தமிழ், முஸ்லிம், சிங்கள மக்களின் ஒற்றுமைக்கு இழுக்கை ஏறபடுத்தி இனவாத காய்களை சரியாக நகர்த்தி நாட்டின் ஒற்றுமை, பொருளாதார வளர்ச்சியில் பாரிய  முரண்பாடுகளை தோற்றுவிப்பதன் மூலம் தனது நிகழ்ச்சி நிரலில் திருப்தியை அடைய எத்தனிக்கும்  சக்திகளின் சதிவலையில் நாம் சிக்காமல் தப்பிக்க வேண்டும்.

அண்மையில் யாழ்ப்பாண பல்கலைக்கழக வவுனியா வளாகத்தில் இடம்பெற்ற சம்பவம் மற்றும் திருமலை இந்து கல்லூரி ஆசிரியைகள் சம்பந்தப்பட்ட சம்பவம் என்பன தீய ஒருசில சக்திகளின் திட்டமிட்ட செயலே. முஸ்லீம் ஆசிரியைகள் தமிழ் பாடசாலைகளிளலும், தமிழ் ஆசிரியைகள் முஸ்லிம் பாடசாலைகளிலும் ஆண்டாண்டு காலமாக தமது மத,கலாச்சார விலுமியங்களுடன் தமது சேவைகளை செய்து வந்துள்ளார். 

இந்த நாட்டில் பௌத்த- ஹிந்து, தமிழ்- முஸ்லிம் உறவுகளை பகையாக்கி நாட்டின் வளங்களை சூரையாடி தமது இருப்புக்களை தக்கவைக்க மேட்கொள்ளும் பாரிய சதிவலையே இது. ஆண்டாண்டு காலமாக எந்த சிக்கல்களும் இல்லாமல் கடமை செய்யப்பட்டு வந்த பாடசாலைகளிலும் தமது அரசியலை செய்ய ஆரம்பித்திருப்பது பாரியாளவிலான பயத்தை தோற்றுவித்துள்ளது. 

முஸ்லீம் சகோதரர்கள் தமிழ் சகோதரிகளினது ஆடை கலாச்சாரத்தையும், தமிழ் கலாசார சிட்பங்களையும்,ஏனைய ஹிந்து மரவுகளையும் தற்போது பொதுவெளியில் விமர்சிக்க ஆரம்பித்திருப்பது இலங்கையில் சிறிய அளவில் வாழும் முஸ்லிம் சமூகத்துக்கு பாரிய இன்னல்களை தோற்றுவிக்கும் என்பதில் மாற்று கருத்து இல்லை. அதே போன்று தமிழ் இன சகோதரர்கள் முஸ்லிம் சகோதரர்களை உசுப்பி விடும் கருத்துக்களை பொதுவெளியில் பேசவருவது ஒரே மொழி பேசினாலும் இரு சமூகம் என்பதை அறிந்துகொள்ள வேண்டும். தவறினால் பாரியாளவிலான முரண்பாடுகளை தோற்றுவிக்கும்.

எந்த முஸ்லிம் பாடசாலை அதிபரும் தொப்புள் தெரியாமல்,மார்பக அழகை மாணவர்களுக்கு காட்டாமல் மூடி ஹாபாயா அல்லது ஹிஜாப் அணியுங்கள் என கூறவில்லை. உள்ளாடையின் பட்டி தெரியும் அளவுக்கு ஜாக்கட்டில் ஜன்னலை வைத்து பட்டுப்பிடவை அணிந்து ஒரு ஆசிரியை பாடசாலையில் மாணவர்களுக்கு கல்வி புகட்டுவதுக்கும், உடம்பை முழுதாக மூடி ஒரு ஆசிரியை மாணவர்கள் முன்னிலையில் படிப்பிப்பதுக்கும் நிறையவே வேற்றுமைகள் உண்டு.

ஒழுக்கமிக்க மாணவர் சமூகத்தை உருவாக்க  இனம்,மதம்,மொழி கடந்த ஆசிரிய ஒழுக்கம் பேணப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தும் இவ்வேளையில் நாட்டில் குழப்பத்தை உண்டாக்க விளையும் சர்சைக்குரிய  திருமலை பாடசாலை அதிபரிடம் கல்வி திணைக்கள உரிய அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தப்பட்டு உண்மைகள் வெளிக்கொணரப்படல் வேண்டும்.
ஜன்னல் ஜாக்கட்டை விட ஹபாயா சிறந்தது !! ஜன்னல் ஜாக்கட்டை விட ஹபாயா சிறந்தது !! Reviewed by Vanni Express News on 4/26/2018 04:53:00 PM Rating: 5