திகன - அம்பகஹலந்தயில் கத்திக் குத்தில் முகம்மத் அக்ரம் உயிரிழப்பு

-முகம்மத் பாஸில்

திகன- கும்புகந்துறை - அம்பகஹலந்தயில் இன்று இரவு 9 மணியளவில் இடம்பெற்ற கத்திக்குத்தில் அக்ரம் என்ற நபர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இரு நபர்களுக்கு இடையில் ஏற்பட்ட வாய்த்தகராறு கைகலப்பாக மாறியதில் இந்த கத்திக்குத்து இடம்பெற்றுள்ளது. 

குறிப்பிட்ட சம்பவத்தில் சுமார் 32 வயதுடைய அக்ரம் காயங்களுடன் தெல்தனிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி  உயிரிழந்துள்ளார்.

அதேவேளை பிரதேசவாசிகளால் கூறப்படும் சந்தேக நபர் ( முஸ்லிம்) தலைமறைவாகி உள்ளதாகவும் தெல்தெனிய பொலிசார் விசாரனைகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவிக்கபடுகிறது.
திகன - அம்பகஹலந்தயில் கத்திக் குத்தில் முகம்மத் அக்ரம் உயிரிழப்பு திகன - அம்பகஹலந்தயில் கத்திக் குத்தில் முகம்மத் அக்ரம் உயிரிழப்பு Reviewed by Vanni Express News on 4/20/2018 11:36:00 PM Rating: 5