இலங்கையில் தரையிறங்கிய உலகின் மிகப் பெரிய விமானம்

உலகின் மிகப்பெரிய சரக்கு விமானமான Antonov An- 225 Mriya என்ற விமானம் இன்று காலை மத்தள விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டதாக எமது செய்தியாளர் கூறினார். 

எரிபொருள் நிரப்புவதற்காகவும் பணியாளர்கள் ஓய்வெடுப்பதற்காகவும் இன்று காலை 6.35 மணியளவில் அந்த விமானம் தரையிறங்கியுள்ளது. 

ரஷ்யாவுக்குச் சொந்தமான அந்த விமானம் மலேசியாவிலிருந்து கராச்சி நோக்கி செல்லும் வழியில் இலங்கையில் தரையிறக்கப்பட்டுள்ளது. 

விமானக் பணியாளர்கள் 24 பேரைக் கொண்ட அந்த விமானம் இன்று இரவு மீண்டும் கராச்சி நோக்கி செல்ல உள்ளதாக எமது செய்தியாளர் கூறினார்.
இலங்கையில் தரையிறங்கிய உலகின் மிகப் பெரிய விமானம் இலங்கையில் தரையிறங்கிய உலகின் மிகப் பெரிய விமானம் Reviewed by Vanni Express News on 4/18/2018 04:52:00 PM Rating: 5