பட்டதாரிகளுக்கு தொழில் நேர்முகப் பரீட்சை 28 ஆம் திகதி வரை

-மினுவாங்கொடை நிருபர்

கம்பஹா மாவட்டத்தில் தொழிலற்ற பட்டதாரிகளுக்கு, அபிவிருத்தி உத்தியோகத்தர் பதவி உள்ளிட்ட ஏனைய அரச தொழில் வாய்ப்புக்களுக்கான நேர்முகப் பரீட்சை, (28) சனிக்கிழமை வரை, கம்பஹா மாவட்ட செயலகத்தில் நடைபெற்று வருகிறது. 

இதேவேளை, இந் நேர்முகத் தேர்வுக்காக இதுவரையிலும் விண்ணப்பிக்காத பட்டதாரிகளைப் பதிவு செய்துகொள்ளும் நடவடிக்கைகளும் அன்றைய தினம் வரை, குறித்த மாவட்ட செயலகத்தில் முன்னெடுக்கப்படவுள்ளதாக, கம்பஹா மாவட்ட உதவிச் செயலாளர் இந்திக்க தெரிவித்துள்ளார்.

கடந்த வருடம் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் ஊடாக அபிவிருத்தி உத்தியோகத்தர் பதவிகளுக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டிருந்த நிலையிலேயே, இந்நேர்முகப் பரீட்சை மற்றும் புதிய பதிவுகள் இடம்பெற்று வருவதாகவும் உதவிச் செயலாளர் குறிப்பிட்டுள்ளார்.
பட்டதாரிகளுக்கு தொழில் நேர்முகப் பரீட்சை 28 ஆம் திகதி வரை பட்டதாரிகளுக்கு தொழில் நேர்முகப் பரீட்சை 28 ஆம் திகதி வரை Reviewed by Vanni Express News on 4/25/2018 11:01:00 PM Rating: 5