குழந்தைகளின் திறமைகளைத் தட்டிக்கொடுக்க தவறக்கூடாது - ஊடகவியலாளர் ராஷித் மல்ஹர்தீன்

மாவனல்லை தெல்கஹகொட கிட்ஸ்வே பாலர் பாசாலையின் வருடாந்த விளையாட்டு போட்டி இன்று தெல்கஹகொட கனிஷ்ட வித்தியாலய மைதானத்தில் நடைபெற்றது. 

கிட்ஸ்வே பாலர் பாசாலையின் பிரதான ஆசிரியை திருமதி பரீஹா ஹஸன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் மாவனல்லை ஜே.எம் மீடியா நிறுவனத்தின் ஸ்தாபகரும் முகாமைத்துவப் பணிப்பாளருமான ஊடகவியலாளர் ராஷித் மல்ஹர்தீன் பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் அங்கு உரையாற்றும் போது,

சிறுவர்கள் செய்யும் நல்ல செயல்களுக்கு பாராட்டுக்களை வழங்குவதுடன் தவறுகளை அவ்வப்போது திருத்துவதற்கும் பெற்றோர்கள் தவறக்கூடாது. சிறிய விடயங்களை கண்டு கொள்ளாது இருக்காமல் இருப்பது நாம் செய்யும் பெரிய தவறாகும். எப்போதும் குழந்தைகளுக்கு நேர்மையான விடயங்களை சொல்லக் கொடுக்கும் போது குழந்தைகள் தாமாகவே உத்வேகமுள்ளவர்களாக மாறுவார்கள். 

எந்த பிள்ளையும் நல்ல பிள்ளை தான் மண்ணில் பிறக்கையில், அவனை நல்லவனாக அல்லது கெட்டவனாக மாற்றுவது அன்னை வளர்ப்பும் சுழலும் தான். எனவே நல்ல விடயங்களை கற்றுக் கொடுத்து சமூகத்திற்கு பயனுள்ள பிள்ளைகளை உருவாக்க முணைவோம் என தெரிவித்தார்.
குழந்தைகளின் திறமைகளைத் தட்டிக்கொடுக்க தவறக்கூடாது - ஊடகவியலாளர் ராஷித் மல்ஹர்தீன் குழந்தைகளின் திறமைகளைத் தட்டிக்கொடுக்க தவறக்கூடாது - ஊடகவியலாளர் ராஷித் மல்ஹர்தீன் Reviewed by Vanni Express News on 4/29/2018 04:12:00 PM Rating: 5