20 வது அரசியலமைப்பு சீர்திருத்தம் தனிப்பட்ட பிரேரணையாக மே மாதம் சமர்பிக்கப்படும்

20 வது அரசியலமைப்பு சீர்திருத்தம் தனிப்பட்ட பிரேரணையாக எதிர்வரும் மே மாதம் பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் என்று மக்கள் விடுதலை முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் அநுரகுமார திசாநாயக்க கூறினார். 

இன்று காலை கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைக் கூறினார். 

இந்த வரைவு பாராளுமன்றத்திற்கு தாக்கல் செய்யப்பட்ட பின்னர் மகா சங்கத்தினர், அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் மற்றும் பொது அமைப்புக்களுடனும் கலந்தாலோசிக்க திட்டமிட்டுள்ளதாக அவர் கூறினார். 

தற்போதைய அரசாங்கம் புதிய அரசியலமைப்பு ஒன்றை உருவாக்குவதற்கு நடவடிக்கை எடுத்த போதிலும் அது இடைநடுவில் நிறுத்தப்பட்டிருப்பதாக அவர் சுட்டிக்காட்டினார். 

தற்போது இருக்கின்ற சூழ்நிலையில் இந்த யோசனையை முன்வைப்பதற்கு சரியான தருணம் இதுவாகும் என்று அநுரகுமார திசாநாயக்க மேலும் கூறினார்.
20 வது அரசியலமைப்பு சீர்திருத்தம் தனிப்பட்ட பிரேரணையாக மே மாதம் சமர்பிக்கப்படும் 20 வது அரசியலமைப்பு சீர்திருத்தம் தனிப்பட்ட பிரேரணையாக மே மாதம் சமர்பிக்கப்படும் Reviewed by Vanni Express News on 4/25/2018 03:20:00 PM Rating: 5