அமித் ஜீவன் வீரசிங்க உள்ளிட்ட 32 பேருக்கு தொடர்ந்தும் விளக்கமறியல்

கண்டி, திகன பகுதியில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலை தொடர்பில் கைது செய்யப்பட்ட பிரதான சந்தேக நபரான அமித் ஜீவன் வீரசிங்க மற்றும் பிரதேச சபை உறுப்பினர் உள்ளிட்ட 32 பேர் தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். 

சந்தேகநபர்களை இன்று (23) தெல்தெனிய நீதவான் முன்னிலையில் ஆஜர் செய்யப்பட்டதையடுத்து அவர்களை மே 02 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

கண்டி, தெல்தெனிய பகுதியில் இன்று பொலிஸ் விஷேட அதிரடிப்படையினரால் பலத்த பாதுகாப்பு வழங்கப்பட்டிருந்ததாக எமது செய்துயாளர் தெரிவித்தார்.
அமித் ஜீவன் வீரசிங்க உள்ளிட்ட 32 பேருக்கு தொடர்ந்தும் விளக்கமறியல் அமித் ஜீவன் வீரசிங்க உள்ளிட்ட 32 பேருக்கு தொடர்ந்தும் விளக்கமறியல் Reviewed by Vanni Express News on 4/23/2018 04:03:00 PM Rating: 5