வடக்கு கிழக்கை பிரிப்பதற்காக சம்பந்தன் பேசுகிறார் - மக்களின் பிரச்சினைகள் பேசுவதில்லை

எதிர்க்கட்சித் தலைவர் இரா சம்பந்தன் வடக்கு கிழக்கை பிரிப்பதற்காக பேசுகிறாரே தவிர குறைந்தது வடக்கு மக்களின் பிரச்சினைகள் சம்பந்தமாகவாவது பேசுவதில்லை என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ கூறியுள்ளார். 

நேற்று கண்டி தலதா மாளிகைக்கு விஜயம் செய்த அவர் வணக்க வழிபாடுகளில் ஈடுபட்ட பின்னர் ஊடகங்களிடம் பேசும் போதே இதனைக் கூறினார். 

லண்டனில் ஜனாதிபதிக்கு எதிராக விடுதலைப் புலி ஆதரவாளர்கள் மேற்கொண்ட ஆர்ப்பாட்டம் குறித்து கருத்து தெரிவித்த அவர், பொய் வாக்குறுதிகளை வழங்கிவிட்டு அதை நிறைவேற்றாவிட்டால் அவர்கள் எதிர்ப்பு தெரிவிப்பது சாதாரணமானது என்று அவர் கூறினார். 

எவ்வாறாயினும் ஜனாதிபதி ஒருவருக்கு எதிராக இவ்வாறு ஆர்ப்பாட்டம் மேற்கொள்வதை எதிர்ப்பதாகவும் மஹிந்த ராஜபக்‌ஷ கூறியுள்ளார்.
வடக்கு கிழக்கை பிரிப்பதற்காக சம்பந்தன் பேசுகிறார் - மக்களின் பிரச்சினைகள் பேசுவதில்லை வடக்கு கிழக்கை பிரிப்பதற்காக சம்பந்தன் பேசுகிறார் - மக்களின் பிரச்சினைகள் பேசுவதில்லை Reviewed by Vanni Express News on 4/21/2018 05:14:00 PM Rating: 5