மன்னார் மாவட்ட வேலையில்லா பட்டதாரிகளுக்கு முக்கிய அறிவித்தல்

மன்னார் மாவட்டத்தில் உள்ள வேலையில்லா பட்டதாரிகளை அரச சேவையில் இணைத்துக்கொள்ளும் நேர்முகத்தேர்வுகள் இடம் பெற்று வருகின்றன.

மன்னார் மாவட்டச் செயலகத்தில் மூன்று பிரிவுகளில் நேற்று முதல் இந்த நேர்முகத்தேர்வுகள் இடம்பெற்று வருகின்றன.

மன்னார் மாவட்டத்தில் சுமார் 700 இற்கும் மேற்பட்ட வேலையில்லா பட்டதாரிகள் காணப்படுகின்ற போதும், அவர்களில் சுமார் 515 பேர் பதிவுகளை மேற்கொண்டுள்ளனர்.

இவர்களுக்கான நேர்முகத்தேர்வுகள் 17 தொடக்கம் 20 ஆம் திகதி வரை மன்னார் மாவட்டச் செயலகத்தில் இடம்பெற்று வருகின்றது.

பதிவுகளை மேற்கொள்ளாத பட்டதாரிகள் எதிர்வரும் 20ஆம் திகதிக்கு முன்னர் மாவட்டச் செயலகத்தில் பதிவுகளை மேற்கொள்ளுமாறும், விடுபட்ட குறித்தபட்டதாரிகளுக்கு எதிர்வரும் 23ஆம் திகதி தொடக்கம் 25 ஆம் திகதி மாலை வரை நேர்முகத்தேர்வுகள் இடம்பெறும் எனவும் மன்னார் மாவட்டச் செயலகம் அறிவித்துள்ளது
மன்னார் மாவட்ட வேலையில்லா பட்டதாரிகளுக்கு முக்கிய அறிவித்தல் மன்னார் மாவட்ட வேலையில்லா பட்டதாரிகளுக்கு முக்கிய அறிவித்தல் Reviewed by Vanni Express News on 4/18/2018 09:54:00 PM Rating: 5