எவரும் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுடன் இணைந்துகொள்ளப் போவதில்லை

ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் 39 பாராளுமன்ற உறுப்பினர்களில் எவரும் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுடன் இணைந்துகொள்ளப் போவதில்லை என்று அமைச்சர் மஹிந்த சமரசிங்க கூறியுள்ளார். 

ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தலைமையகத்தில் இன்று காலை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைக் கூறினார். 

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவாக வாக்களித்த 16 பாராளுமன்ற உறுப்பினர்களும் அந்த தீர்மானத்தின் பின்னர் எதிர்க்கட்சி ஆசனத்தில் அமர உள்ளதாகவும், எஞ்சிய 23 பாராளுமன்ற உறுப்பினர்களும் தொடர்ந்தி அரசாங்கத்துடன் இணைந்து செயற்படுவார்கள் என்று அமைச்சர் கூறினார். 

இதேவேளை ஶ்ரீலங்கா சுதந்திர கட்சி சார்பாக மறுசீரமைப்பு குழுவொன்று நியமிக்கப்பட்டு கட்சியினும் விரிவான மறுசீரமைப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும், அந்தக் குழுவை எதிர்வரும் மே மாதம் 07ம் மற்றும் 15ம் திகதிகளுக்கு இடையில் நியமிப்பதாகவும் அமைச்சர் மஹிந்த சமரசிங்க கூறியுள்ளார்.
எவரும் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுடன் இணைந்துகொள்ளப் போவதில்லை எவரும் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுடன் இணைந்துகொள்ளப் போவதில்லை Reviewed by Vanni Express News on 4/25/2018 11:11:00 PM Rating: 5