மக்களின் பிரச்சினைகளை தீர்க்காமல் கட்சி பிரச்சினைகளை தீர்ப்பதில் காலம் கடத்துகிறது அரசு

நல்லாட்சி அரசு நாட்டு மக்களின் பிரச்சினைகளுக்கு  தீர்வு காணாமல் அவர்களின் சொந்த பிரச்சினைகளை தீர்ப்பதில் காலம் கடத்துவதாக ஹம்பாந்தோட்டை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்‌ஷ குறிப்பிட்டார்.

நீதிமன்ற வளாகத்தில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட அவர் மேலும் கூறுகையில் ,

இன்று எமது தாய் நாடு இலக்கின்றி பயணித்து வருகிறது.ஆனால் ஆட்சியாளர்களோ நாட்டின் நலன்களை பற்றி சிந்தித்தி செயலாற்றாமல் அவர்களின் கட்சிகளுக்குள் உள்ள பிரச்சினைகளைப் பற்றியே சிந்துத்தும் பேசியும் வருகிறார்கள்.

தற்போது அதி மேதகு ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன அவர்கள் உலகில் எங்கு சென்றாலும் சுதந்திர கட்சிக்குள் ஏற்பட்டுள்ள நெருக்கடி பற்றியே பேசுகிறார்.

ஐக்கிய தேசிய கட்சி நாட்டை மறுசீரமைப்பதை விட்டு கட்சியை சீரமைப்பதாக காலத்தை கடத்தி வருகிறது.

கட்சியை மறுசீரமைப்பதாக கூறிய  ஐக்கிய தேசிய கட்சி மூத்த உறுப்பினர்கள் தற்போது சிரிகொத்த வாசலில் தலையில் கையை வைத்துக்கொண்டு உள்ளனர்.

இலங்கை ரூபாவின் பெறுமதி வரலாற்றில் இல்லாத அளவு வீழ்ச்சி அடைந்துள்ளது. நாட்டில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுள்ளது.பாதாள உலகம் கோஷ்டிகள் தலை தூக்கியுள்ளன.அரசாங்கத்தின் சில பாராளுமன்ற உறுப்பினர்கள் நீதி மன்றத்தை எல்லை மீறி விமர்சிக்கின்றனர்.

நாட்டு மக்கள் கடும் இன்னல்களுக் முகம் கொடுத்துள்ளனர்.இதனை ஆட்சியாளரகள் புரிந்துகொள்ள வேண்டும்.இப்படியே காலத்தை கடத்தாமல் எஞ்சியிருக்கு ஒன்றரை வருட காலத்திலாவது  மக்களுக்கு நன்மை ஏற்படக்கூடிய   ஏதாவது  செய்யுங்கள் என்ற கோரிக்கையை நாம் அரசாங்கத்திற்கு முன்வைக்கின் என  அவர் குறிப்பிட்டார்.
மக்களின் பிரச்சினைகளை தீர்க்காமல் கட்சி பிரச்சினைகளை தீர்ப்பதில் காலம் கடத்துகிறது அரசு மக்களின் பிரச்சினைகளை தீர்க்காமல் கட்சி பிரச்சினைகளை தீர்ப்பதில் காலம் கடத்துகிறது அரசு Reviewed by Vanni Express News on 4/26/2018 03:51:00 PM Rating: 5