நவமணி ரமழான் பரிசு மழை – 2017 பரிசளிப்பு நிகழ்வு இன்று கொழும்பில்

-எம்.எஸ்.எம்.ஸாகிர்

நவமணிப் பத்திரிகை ஜம்மியத்துஷ் ஷபாப் நிறுவனத்துடன் இணைந்து 05 ஆவது முறையாக நடாத்தும் ரமழான் பரிசு மழை 2017 இன் பரிசளிப்பு நிகழ்வு இன்று (19) வியாழக்கிழமை பிற்பகல் 3.00 மணிக்கு ஜம்மியத்துஷ் - ஷபாப் கேட்போர் கூடத்தில் நடைபெறும்.

கடந்த வருடம் நோன்பு காலத்தில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு நாட்டின் நாலா புறங்களிலிருந்தும் அதிகமான போட்டியாளர்கள் கலந்து கொண்டு பதில்களை அனுப்பி வைத்தனர்.

இதில் 1ஆம் பரிசான உம்ரா பொதியை ஹன்தெஸ்ஸ - சனீஹா காசிம் பெற்றுக் கொள்வதோடு, 2ஆம் பரிசான மடிக்கணனியை தர்காநகர் - சாகிரா பாஹிம் மற்றும் 3ஆம் பரிசான  ஸ்மாட் கையடக்கத் தொலைபேசியை வெல்லம்பிடிய - எம். எச். ஹாதியும் பெற்றுக் கொள்கின்றனர்.

கட்டுரை எழுதும் போட்டியில் காத்தான்குடி ஏ. எல்.எம். சித்தீக் 1ஆம் பரிசினையும் இஸட். ஏ. ரஹ்மான் 2ஆம் பரிசினையும் ஜே.டி. எஸ். ஜெஸீலா 3ஆம் பரிசினையும் பெறுகின்றனர்.

அத்தோடு, பாலமுனை - எம். எச். சுபைதீன், சாய்ந்தமருது - எம். றிம்ஸாத், சில்மியாபுர - எச். பத்ஹுல்லாஹ், வெலம்பொட  - ஏ. ஏ. நுஃமான், கல்முனைக்குடி  - எஸ். எம். சதீம், இராஜகிரிய - யூ. எல். றிப்கா, காத்தான்குடி - ஐ. ஏ. றஸ்ஸாக், கொச்சிக்கட - ஐ. எம். இர்ஸாத், மருதானை - ரீ. ஆர். டிவாங்ஸோ, கள் - எலிய - பி. எம். லீனா, சம்மாந்துறை - ஆர். எம். தாரிக், நாவலப்பிடிய - எம். பாத்திமா, வெலிகம - எம். எஸ். எம். யுஸ்ரி, கிண்ணியா - ஐ. இல்யாஸீன், ஹொரவப்பொத்தான - எம். கே. பஸீலா, மாவனெல்ல - எம். எஸ். ஸஷா, ஒலுவில் - இஸட். அப்துர்ரஹ்மான், சாய்ந்தமருது - ஏ. அஸ்பா, கொழும்பு - 15 - எம். நஜாத், கண்டி - எம். இஸட். அஸ்லஹ், கொச்சிகட - எம். டி. எம். தன்வீர், கந்தளாய் - ஆர். றஸ்மியா  ஆகிய 22 பேர் ஆறுதல் பரிசினைப் பெற்றுக் கொள்கின்றனர்.     

ஜம்மியதுஷ்- ஷபாப் பிரதிப் பணிப்பாளர் எம். எஸ். எம். தாஸிம் மௌலவியின் தலைமையில் நடைபெறும் இந்நிகழ்வில், முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் தபால் துறை அமைச்சர் எம்.எச். ஏ. ஹலீம் பிரதம அதிதியாகவும் தேசிய நல்லிணக்க, ஒருங்கிணைப்பு இராஜாங்க அமைச்சர் ஏ.எச்.எம். பௌஸி, அல் - குர்ஆன், சுன்னா கற்கைக்கான இளவரசர் ஹாமித் பின் அப்துல் அஸீஸ் அல் - சவூத்தின் தாயார் சங்க பொது அலுவலகத்தின் மேற்பார்வையாளரான முஹம்மத் றியால் அஸ்ஸெய்லானி (சாதிக் ஹாஜியார்) ஆகியோர் கௌரவ அதிதிகளாகவும் கலந்து சிறப்பிக்கவுள்ளனர்.

மேலும் விசேட அதிதிகள், கல்விமான்கள், உலமாக்கள், வர்த்தகப்பிரமுகர்கள், ஊடகவியலாளர்கள், நலன்விரும்பிகள் எனப் பலரும் நிகழ்வில் கலந்து கொண்டு சிறப்பிக்கவிருக்கின்றனர்.
நவமணி ரமழான் பரிசு மழை – 2017 பரிசளிப்பு நிகழ்வு இன்று கொழும்பில் நவமணி ரமழான் பரிசு மழை – 2017 பரிசளிப்பு நிகழ்வு இன்று கொழும்பில் Reviewed by Vanni Express News on 4/19/2018 03:06:00 PM Rating: 5