சங்கானையில் தமிழர் பாரம்பரிய விளையாட்டு நிகழ்வுகள் - Photos

சங்கானை மாவடி இந்து இளைஞர் மன்றத்தின் ஏற்பாட்டில் வருடந்தோறும் நடாத்தப்படும் தமிழர் பாரம்பரிய விளையாட்டு நிகழ்வுகள் நேற்றைய தினம் சங்கானை மாவடி ஞான வைரவர் ஆலய முன்றலில் சிறப்பாக நடைபெற்றது. 

பாரம்பரிய விளையாட்டு நிகழ்வுகள் வரிசையில் நேற்றைய தினம் சிறுவர்கள் முதல் பெரியவர்களுக்கான  போர்த்தேங்காய் அடிக்கும் நிகழ்வு மற்றும் சிறுவர்களுக்கான விசேட நிகழ்வுகளும் நடைபெற்றது.

தமிழர்களின் கலை கலாசார பண்பாடுகள் குறைவடைந்து வருகின்ற இன்றைய சூழலில் அதனை அழியவிடாது வருடந்தோறும் இவ்வாறான பாரம்பரிய விளையாட்டு நிகழ்வுகளின் மூலமாக அதனை வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்வதற்காக சங்கானை மாவடி இந்து இளைஞர் மன்றம் பல்வேறு செயற்பாடுகளையும் முன்னெடுத்துச் செல்கின்றமை குறிப்பிடத்தக்கது.
சங்கானையில் தமிழர் பாரம்பரிய விளையாட்டு நிகழ்வுகள் - Photos சங்கானையில் தமிழர் பாரம்பரிய விளையாட்டு நிகழ்வுகள் - Photos Reviewed by Vanni Express News on 4/30/2018 09:05:00 PM Rating: 5