உண்மைகளை மறைத்து பொய்களை பரப்புவது எதிர்கால முன்னேற்றத்துக்கு பாதிப்பு

உண்மையை மறைத்து பொய்களை பரப்புவதற்கு சிலர் முயற்சிப்பது தாய்நாட்டின் எதிர்கால முன்னேற்றத்துக்கு பாதிப்பாக அமைவதாக லண்டனில் வசிக்கும் இலங்கையர்களிடம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். 

அத்துடன் தாய்நாட்டின் உண்மையான நிலைமைகள் பற்றிய சரியான புரிந்துணர்வுடன் நாட்டைக் கட்டியெழுப்பும் பயணத்திற்கு ஒத்துழைப்பு வழங்குமாறு அவர்களுக்கு ஜனாதிபதி அழைப்பு விடுத்துள்ளார். 

பொதுநலவாய அரச தலைவர்களது மாநாட்டில் கலந்து கொள்வதற்காக லண்டன் சென்றுள்ள ஜனாதிபதி, நேற்று (17) லண்டனில் வசிக்கும் இலங்கையர்களை சந்தித்து உரையாற்றும் போது இவ்வாறு குறிப்பிட்டார். 

நாட்டில் சுதந்திரத்தையும், ஜனநாயகத்தையும் உறுதிசெய்து நாட்டை அபிவிருத்திப் பாதையில் இட்டுச் செல்ல அரசாங்கம் எடுத்துள்ள வேலைத்திட்டங்கள் பற்றிய சரியான தகவல்கள் மக்களை சென்றடைவதில்லை என்றும் ஜனாதிபதி கூறியுள்ளார். 

சில ஊடகங்களும் சமூக வலைத்தளங்களும் குறுகிய அரசியல் நோக்கம் மற்றும் வர்த்தக நோக்கங்களுக்காக உண்மையை மறைத்து பொய்களை வௌிப்படுத்த முயற்சிப்பதே இதற்கு முக்கிய காரணம் என்றும் ஜனாதிபதி கூறியுள்ளார். 

தற்போதைய அரசாங்கத்தின் கீழ் நாட்டின் சகல துறைகளிலும் இருக்கின்ற சுதந்திரம் பற்றி அவர்கள் சரியாக புரிந்துகொள்ளவில்லை என்றும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
உண்மைகளை மறைத்து பொய்களை பரப்புவது எதிர்கால முன்னேற்றத்துக்கு பாதிப்பு உண்மைகளை மறைத்து பொய்களை பரப்புவது எதிர்கால முன்னேற்றத்துக்கு பாதிப்பு Reviewed by Vanni Express News on 4/18/2018 09:29:00 PM Rating: 5