வாக்குறுதியை நிறைவேற்றிய ஜனாதிபதி - வித்யாவின் சகோதரிக்கு அபிவிருத்தி அலுவலர் நியமனம்

படுகொலை செய்யப்பட்ட யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த மாணவி வித்யா சிவலோகநாதனின் மூத்த சகோதரியான யாழ் பல்கலைகழக பட்டதாரி நிஷாந்தி சிவலோகநாதனுக்கு அபிவிருத்தி அலுவலர் நியமனம் வழங்கப்பட்டுள்ளது. 

அவர் தனது நியமனத்தை நேற்று (24) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் பெற்றுக்கொண்டார். 

கடந்த வருடம் ஜனாதிபதி வவுனியாவுக்கு சென்றிருந்த வேளையில் மாணவி வித்தியாவின் வீட்டுக்கும் சென்று அக்குடும்பத்தினரின் சுகதுக்கங்களை கேட்டறிந்தார். 

அப்போது அவர்களுக்கு வழங்கப்பட்ட வாக்குறுதிக்கு ஏற்ப இந்த நியமனத்தை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 

இந்த நிகழ்வில் மாணவி வித்தியாவின் தாயாரான சரஸ்வதி சிவலோகநாதன் மற்றும் வித்தியா சிவலோகநாதன் மன்றத்தின் தலைவி பிரபல திரைப்பட கலைஞர் சுவினீதா வீரசிங்க உள்ளிட்ட பலர் கலந்துக் கொண்டனர்.
வாக்குறுதியை நிறைவேற்றிய ஜனாதிபதி - வித்யாவின் சகோதரிக்கு அபிவிருத்தி அலுவலர் நியமனம் வாக்குறுதியை நிறைவேற்றிய ஜனாதிபதி - வித்யாவின் சகோதரிக்கு அபிவிருத்தி அலுவலர் நியமனம் Reviewed by Vanni Express News on 4/25/2018 11:54:00 PM Rating: 5