மனிதன் உயர்வதும் தாழ்வதும் பிறப்பால் அன்றி அவனது செயலாலேயே ஆகும்

புத்த தர்மத்தின் வருகையினாலே மனிதன் சிந்தித்து செயலாற்றி உண்மையை உணரும் உரிமையை தனதாக்கிக் கொண்டான். மனிதன் உயர்வதும் தாழ்வதும் பிறப்பால் அன்றி அவனது செயலாலேயே ஆகும் என்பதே புத்த பகவான் அருளிய போதனையின் அடிநாதமாகும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். 

வெசாக் தினத்தையொட்டி ஜனாதிபதி ஊடகப்பிரிவு அனுப்பி வைத்துள்ள அறிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிடப்பட்டிருந்தது. 

அதில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது, சித்தார்த்த குமாரரின் பிறப்பு, ஞானம் பெறுதல் மற்றும் புத்த பெருமான் சமாதியடைதல் ஆகிய முக்கிய நிகழ்வுகளை அடிப்படையாகக் கொண்டு உலக வாழ் பௌத்த பெருமக்களினால் கடைப்பிடிக்கப்படுகின்றது வெசாக் விழா. 

பாரத சமூகம் பல்வேறு நம்பிக்கைகள் வழிபாடுகள் மதங்கள் ஆகியவற்றைப் பின்பற்றும் மிகச் சிக்கலான நிலையில் இருந்த போதே கௌதம புத்தரின் உதயம் நிகழ்ந்தது. அன்று மனித சமூகம் பல்வேறு கூறுகளாகவும் பிரிக்கப்பட்டிருந்தது. 

பெண்கள் புறக்கணிக்கப்பட்ட ஜீவராசிகளாகவே கணிக்கப்பட்டதோடு ஆணாதிக்கத்தின் முன்னால் பெண்மை வரப்பிரசாதமற்ற ஒரு பகுதி என்ற நிலைமைக்கு ஆளாக்கப்பட்டிருந்தனர். 

பழங்கால சம்பிரதாயக் கருத்துக்களை சிதைத்த புத்த தர்மத்தின் வருகையினால் அகந்தை இருளில் மூழ்கியிருந்த சமூகம் விஞ்ஞான நோக்குமிக்க விழிப்புணர்வைப் பெற்றதுடன் மனிதன் நேரடியாகவே அறிவின் வழிகாட்டலுக்கு ஆளாக்கப்பட்டான். அதனால் மனிதன் சிந்தித்து செயலாற்றி உண்மையை உணரும் உரிமையை தனதாக்கிக் கொண்டான். 

பொய்மையிலிருந்து விடுபட்ட ஆன்மீக மனிதன் இச் சமூகத்திற்கு கிடைக்கப் பெற்றான். மனிதன் உயர்வதும் தாழ்வதும் பிறப்பால் அன்றி அவனது செயலாலேயே ஆகும் என்பதே புத்த பகவான் அருளிய போதனையின் அடிநாதமாகும். 

அதன் மூலம் சகல மனிதர்களும் ஒன்றாய் இணையும் சக வாழ்வு உயிரோட்டம் பெற்றது. 

குரோத மனம் மீது கருணையைப் பாய்ச்சி, உயிரினங்கள் மீது அளவற்ற அன்புடன் மனிதனின் அறிவை மலரச் செய்து வாழ்க்கையின் விமோசனத்தை அடையும் வழியை உணர்த்திய புத்த பகவானின் பெரும் குணங்களை ஞாபகப்படுத்தும் இந்த புனிதமான வெசாக் வைபவத்தில் அந்த புத்த பகவானின் அருளினால் உலக வாழ் பௌத்த மக்கள் அனைவருக்கும் புனிதமான வெசாக் பண்டிகை வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றேன். இந்தப் 

புனித நாளில் நீதியின் வழியில் செயற்பட அனைவரும் உறுதி எடுத்துக்கொள்வோம் என குறிப்பிடப்பட்டுள்ளது.
மனிதன் உயர்வதும் தாழ்வதும் பிறப்பால் அன்றி அவனது செயலாலேயே ஆகும் மனிதன் உயர்வதும் தாழ்வதும் பிறப்பால் அன்றி அவனது செயலாலேயே ஆகும் Reviewed by Vanni Express News on 4/29/2018 03:14:00 PM Rating: 5