6 வயதுடைய பாடசாலை மாணவனை கொடூரமாக பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்திய பெரியப்பா

6 வயதுடைய பாடசாலை மாணவன் ஒருவனை கொடூரமாக பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்திய 45 வயதான நபர் ஒருவரை பல்லம பொலிஸார் கைது செய்துள்ளனர். 

பல்லம - நாகவில பிரதேசத்தை சேர்ந்த 45 வயதுடைய திருமணமாகாத ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். 

இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபர் குறித்த சிறுவனின் தந்தையுடைய மூத்த சகோதரன் என பொலிஸார் தெரிவித்தனர். 

குறித்த நபரே சிறுவனை தினமும் பாடசாலைக்கு கொண்டு சென்று மீண்டும் அழைத்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. 

இந்நிலையில் கடந்த 23 ஆம் திகதி பிற்பகல் சந்தேக நபர் சிறுவனை பாடசாலையில் இருந்து வீட்டுக்கு அழைத்து வந்துள்ள நிலையில், வீட்டில் எவரும் இல்லை என்பதை அவர் அறிந்து கொண்ட பின்னரே குறித்த நபர், சிறுவனை வன்புணர்வுக்கு உட்படுத்தியுள்ளார். 

சந்தேக நபரை பொலிஸார் கைது செய்துள்ளதுடன் குறித்த சிறுவன் பரிசோதனைக்காக புத்தளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

சந்தேக நபர் ஆணமடுவ நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளதுடன் பல்லம பொலிஸா்ர அலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
6 வயதுடைய பாடசாலை மாணவனை கொடூரமாக பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்திய பெரியப்பா 6 வயதுடைய பாடசாலை மாணவனை கொடூரமாக பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்திய பெரியப்பா Reviewed by Vanni Express News on 4/25/2018 04:01:00 PM Rating: 5