பாடசாலைகளின் இரண்டாம் தவணை நாளை ஆரம்பம்

அரசாங்கப் பாடசாலைகளின் இரண்டாம் தவணை நாளை ஆரம்பமாகின்றது. 

புதிய பாடசாலை தவணை ஆரம்பமாவதற்கு முன்னர் அனைத்து பாடசாலை சுற்றுப்புறங்களையும் துப்பரவு செய்யுமாறு கல்வியமைச்சு அனைத்து பாடசாலைகளுக்கும் அறிவித்துள்ளது. 

இதற்கமைவாக ஆசிரியர்கள் பெற்றோர்கள் உள்ளிட்டோரின் பங்களிப்புடன் இன்று நாட்டிலுள்ள அனைத்து பாடசாலைகளிலும் சுற்றாடல் பகுதிகள் துப்பரவு செய்யப்படவுள்ளன. 

எதிர்வரும் பருவ கால மழையின் காரணமாக டெங்கு நுளம்பு பெரும் அபாயம் இருப்பதினால் இதனை எதிர்கொள்வதற்காக கல்வியமைச்சு இந்தத் தீர்மானத்தை மேற்கொண்டுள்ளது. 

மேல் மாகாண கல்வி திணைக்களத்தின் மேலதிக பணிப்பாளர் நிமல் கருணாரட்ன இது தொடர்பாக கருத்து தெரிவிக்கையில் இன்றைய தினம் மேல் மாகாணத்திலுள்ள அனைத்து பாடசாலை சுற்றாடல் பகுதிகளிலும் சிரமதான பணிகள் இடம்பெறவுள்ளன என்று தெரிவித்தார். 

டெங்கு நுளம்பை கட்டுப்படுத்துவதுடன் வெசாக் வாரத்தை முன்னிட்டு பாடசாலைகளை அலங்கரிப்பதே இதன் நோக்கமாகும்..

அரசாங்கம் அறிவித்துள்ள பெசாக் வாரத்திற்கு அமைவாக பாடசாலைகளில் வெசாக் வாரத்தை முன்னெடுப்பதிலும் கல்வியமைச்சு கவனம் செலுத்தியுள்ளது. 

பாடசாலை மாணவர்கள் மத்தியில் நல்லிணக்கத்தை கட்டியெழுப்பும் வகையில் இந்த வார காலப்பகுதியில் பல நிகழ்ச்சிகளை நடத்துமாறு கல்வியமைச்சு பாடசாலை அதிபர்களுக்கு ஆலோசனை வழங்கியுள்ளது என்று அமைச்சின் மதம் தொடர்பான கல்வி பிரிவின் பணிப்பாளர் எஸ்.பி.என்.நிமல் தர்மசிறி தெரிவித்துள்ளார்.
பாடசாலைகளின் இரண்டாம் தவணை நாளை ஆரம்பம் பாடசாலைகளின் இரண்டாம் தவணை நாளை ஆரம்பம் Reviewed by Vanni Express News on 4/22/2018 02:35:00 PM Rating: 5