சம்பந்தனுடன் எவ்வித உடன்படிக்கையும் இல்லை - அமைச்சர் சரத் பொன்சேகா

அரசாங்கத்தில் குறைபாடு இருப்பதை தான் ஏற்றுக் கொள்வதாகவும், அதற்காக முன்னர் இருந்த ஆட்சியை மீண்டும் கொண்டு வருவது தீர்வாகாது என்றும் பிரதேச அபிவிருத்தி அமைச்சர் சரத் பொன்சேகா கூறியுள்ளார். 

மக்களின் தேவைக்கு ஏற்ப அரசாங்கத்தில் சில மாற்றங்களை செய்துவிட்டு மக்களிடம் செல்ல வேண்டும் என்றும் அவ்வாறில்லாவிட்டால் ஐக்கிய தேசிய கட்சியான எமக்கு வருத்தப்பட வேண்டி ஏற்படும் என்றும் அவர் கூறியுள்ளார். 

அரசாங்கத்தில் இருந்து விலகிய ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் 16 அமைச்சர்களும் அமைச்சரவைக்குள்ளும் அரசாங்கத்திற்குள்ளும் கெட்ட நேரமாக இருந்ததாக அமைச்சர் கூறியுள்ளார். 

அதேநேரம் எதிர்க்கட்சித் தலைவர் இரா. சம்பந்தனுடன் எவ்வித உடன்படிக்கையும் இல்லை என்றும் பிரதேச அபிவிருத்தி அமைச்சர் சரத் பொன்சேகா கூறியுள்ளார்.
சம்பந்தனுடன் எவ்வித உடன்படிக்கையும் இல்லை - அமைச்சர் சரத் பொன்சேகா சம்பந்தனுடன் எவ்வித உடன்படிக்கையும் இல்லை - அமைச்சர் சரத் பொன்சேகா Reviewed by Vanni Express News on 4/21/2018 10:51:00 PM Rating: 5