ஐக்கிய தேசிய கட்சியின் பதவிகள் தொடர்பில் தீர்மானம்

ஐக்கிய தேசியக் கட்சியின் முக்கிய பதவிகளுக்கான உறுப்பினர்கள் பெயரிடப்பட்டுள்ளனர். 

அதன்படி, கட்சியின் புதிய பொதுச் செயலாளராக அமைச்சர் அகில விராஜ் காரியவசமும் தவிசாளராக அமைச்சர் கபீர் ஹசீமும் நியமிக்கப்பட்டுள்ளனர். 

மேலும் , தேசிய அமைப்பாளராக நவீன் திஸாநாயக்க நியமிக்கப்பட்டுள்ளதுடன் பிரதித் தலைவராக சஜித் பிரேமதாசவும், ரவி கருணாநாயக்க உப தலைவராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். 

அத்துடன் கட்சியின் பொருளாளராக ஹர்ச டி சில்வா நியமிக்கப்பட்டுள்ளார். 

கட்சியின் அடுத்த பதவிகள் தொடர்பில் நாளை (26) அறிவிக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இன்று மாலை ஐக்கிய தேசிய கட்சியின் பதவிகள் தொடர்பில் தீர்மானம் ஒன்றை எடுப்பதற்காக அதன் மறுசீரமைப்பு நடவடிக்கைகளுக்காக நியமிக்கப்பட்ட அரசியல் சபை அலரிமாளிகையில் கூடிய போதே , இந்த பதவிகளுக்கான நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளது. 

இதன்போது எடுக்கப்பட்ட தீர்மானம் நாளை காலை கட்சியின் தலைமையகத்தில் இடம்பெறவுள்ள செயற்குழு கூட்டத்தில் முன்வைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஐக்கிய தேசிய கட்சியின் பதவிகள் தொடர்பில் தீர்மானம் ஐக்கிய தேசிய கட்சியின் பதவிகள் தொடர்பில் தீர்மானம் Reviewed by Vanni Express News on 4/25/2018 11:21:00 PM Rating: 5