ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் பதவிக்காக எவரும் முன்வரவில்லை

ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் பதவிக்கு போட்டியிடுவதற்கான எண்ணம் வேறு எவரிடத்திலும் இருக்கவில்லை என்று அந்தக் கட்சியின் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் கூறியுள்ளார். 

கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் மத்திய செயற்குழு உறுப்பினர்களை அழைத்து தலைமை பதவியில் நிற்பதற்கு யாராவது விருப்பமா என்று கட்சியின் தலைவரான ரணில் விக்ரமசிங்க கேட்டிருந்ததாகவும் அகிலவிராஜ் காரியவசம் கூறியுள்ளார். 

ஐக்கிய தேசிய கட்சியின் செயலாளராக நியமிக்கப்பட்ட பின்னர் அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் இன்று மகாநாயக்க தேரர்களை சந்தித்து ஆசி பெற்றுக் கொண்ட பின்னர் ஊடகங்களிடம் பேசும் போது இவ்வாறு கூறினார். 

எதிர்காலத்தில் முன்னெடுக்க எதிர்பார்த்துள்ள திட்டங்களுக்கு மகாநாயக்க தேரர்களிடம் அவர் ஆசி பெற்றுக் கொண்ட பின்னர் தலதா மாளிகைக்கு சென்ற அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் வணக்க வழிபாடுகளில் ஈடுபட்டார்.
ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் பதவிக்காக எவரும் முன்வரவில்லை ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் பதவிக்காக எவரும் முன்வரவில்லை Reviewed by Vanni Express News on 4/28/2018 10:37:00 PM Rating: 5