மக்களுக்காக தற்போதைய அரசாங்கத்தை கவிழ்க்க வேண்டும்

அடுத்த பொதுத் தேர்தல் நடத்தப்படும் வரை காத்திருக்காது உடனடியாக அரசாங்கத்தை மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஜனநாயக இடதுசாரி முன்னணியின் பொதுச் செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார். 

கொழும்பில் நேற்று (18) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி பதவியை இரத்துச் செய்ய வேண்டும் என்று மக்கள் விடுதலை முன்னணி கொண்டு வரும் திருத்தச் சட்டம் குறித்து கருத்து வெளியிடும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். 

அடுத்த பொதுத் தேர்தல் வரை தற்போதைய அரசாங்கம் ஆட்சியில் இருப்பது கூட்டு எதிர்க்கட்சிக்கு சாதகமாக அமையும் என சிலர் கருத்து வெளியிட்டு வருகின்றனர். 

எனினும் அதுவரை காத்திருக்காது மக்களுக்காக தற்போதைய அரசாங்கத்தை கவிழ்க்க வேண்டும். 

மேலும் ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் மக்கள் விடுதலை முன்னணி என்பன கொண்டு வரும் யோசனைகள் குறித்து கவனமாக செயற்பட வேண்டும் எனவும் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
மக்களுக்காக தற்போதைய அரசாங்கத்தை கவிழ்க்க வேண்டும் மக்களுக்காக தற்போதைய அரசாங்கத்தை கவிழ்க்க வேண்டும் Reviewed by Vanni Express News on 4/19/2018 02:58:00 PM Rating: 5