நாட்டின் பல பகுதிகளில் இன்று இரவு இடியுடன் கூடிய மழை

நாட்டின் பல பகுதிகளில் இன்று இரவு இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என காலநிலை அவதான நிலையம் எதிர்வு கூறியுள்ளது.

மேல், சப்ரகமுவ, தென், மத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் இவ்வாறு மழை பெய்யலாம் என அந்த நிலையம் குறிப்பிட்டுள்ளது.

இதனுடன் புத்தளத்தில் இருந்து மன்னார் ஊடாக காங்கேசன்துறை வரையான கடல் பகுதிகளில் காற்றின் வேகம் மணிக்கு 70 முதல் 80 கிலோ மீட்டர் வரை அதிகரித்து வீசக்கூடும் என என காலநிலை அவதான நிலையம் மேலும் தெரிவித்துள்ளது.
நாட்டின் பல பகுதிகளில் இன்று இரவு இடியுடன் கூடிய மழை நாட்டின் பல பகுதிகளில் இன்று இரவு இடியுடன் கூடிய மழை Reviewed by Vanni Express News on 4/20/2018 11:57:00 PM Rating: 5