நாட்டில் பிற்பகல் வேளையில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை

நாட்டில் பிற்பகல் வேளையில் இடியுடன்கூடிய மழை பெய்வதற்கான சாத்தியம் அதிகமாக காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. 

நாட்டின் பெரும்பாலான மாகாணங்களில் பிற்பகல் 2 மணிக்கு பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யலாம் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. 

சில பிரதேசங்களில் குறிப்பாக மேற்கு, சப்ரகமுவ, மத்திய, தெற்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் குருநாகல் மாவட்டத்திலும் சுமர் 75 மில்லி மீற்றர் மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. 

இதேவேளை, புத்தளத்திலிருந்து கொழும்பு காலி ஊடாக மட்டக்களப்பு வரையான கடற்கரையோரப் பகுதிகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். 

இடியுடன் கூடிய மழையின் போது தற்காலிகமாக அப் பிரதேசங்களில் காற்றும் வீசக்கூடும். இடி, மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் பொதுமக்களை வளிமண்டலவியல் திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.
நாட்டில் பிற்பகல் வேளையில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை நாட்டில் பிற்பகல் வேளையில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை Reviewed by Vanni Express News on 4/26/2018 03:31:00 PM Rating: 5