இன்று நாட்டின் பல பகுதிகளில் இடியுடன் கூடிய மழை

நாட்டின் பல பகுதிகளில் இன்று பிற்பகல் 2 மணிக்கு பின்னர் இடியுடன் கூடிய மழை பெய்யும் என காலநிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது. 

மேல், சப்ரகமுவ, மத்திய, தென் மற்றும் ஊவா மாகாணங்களில் சில இடங்களில் 75 மில்லி மீட்டர் அளவிலான பலத்த மழை பெய்யக்கூடும் என காலநிலை அவதான நிலையம் எதிர்வு கூறியுள்ளது. 

இதனுடன் காங்கேசன்துறையில் இருந்து திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு ஊடாக பொத்துவில் வரையான கடற்பிரதேசங்களில் மழை பெய்யும் வேளை காற்றின் வேகம் மணிக்கு 70 முதல் 80 கிலோ மீட்டர் வரை அதிகரித்து வீசக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதேவேளை, தொடர்ந்து மழை பெய்தால் எஹலியகொட, எலபாத, குருவிட்ட மற்றும் இரத்தினபுரி பிரதேச செயலகம் மற்றும் அதனை அண்டியுள்ள பகுதிகளில் மண்சரிவு, மண்மேடு சரிவு மற்றும் கற்பாறைகள் கவிழும் அவதானம் காணப்படுவதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவக்கப்பட்டுள்ளது.
இன்று நாட்டின் பல பகுதிகளில் இடியுடன் கூடிய மழை இன்று நாட்டின் பல பகுதிகளில் இடியுடன் கூடிய மழை Reviewed by Vanni Express News on 4/29/2018 03:57:00 PM Rating: 5