கடும் மழை நீரில் மூழ்கியது நாவலப்பிட்டி நகரம்

-க.கிஷாந்தன்

மலையகத்தில் பெய்துவரும் கடும் மழையைத்தொடர்ந்து நாவலப்பிட்டி நகரத்தில் ஒரு பகுதி நீரில் மூழ்கியுள்ளது. இதனால் இன்று மாலை வாகன போக்குவரத்துக்கும் தடை ஏற்பட்டது.

நாவலப்பிட்டி நகரத்தில் தபால் அலுவலகத்தின் முன்பாகவும், நாவலப்பிட்டி – கண்டி வீதியில் ஒருபகுதியும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.

அத்தோடு நீர் செல்லும் வடிக்கான்கள் மூடியதனால் நீர் வெளியேறி வீதிக்கு செல்வதனால் பிரதான வீதியினூடான போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. நகரின் பாதைகளில் வெள்ளபெருக்கெடுத்ததுடன், நகருக்கு வருகைத்தந்தோர் பல சிரமங்களை எதிர்நோக்கியிருந்தனர்.
கடும் மழை நீரில் மூழ்கியது நாவலப்பிட்டி நகரம் கடும் மழை நீரில் மூழ்கியது நாவலப்பிட்டி நகரம் Reviewed by Vanni Express News on 4/26/2018 11:37:00 PM Rating: 5