நாட்டின் முக்கிய தலைவர்கள் மூவரும் ஒரே மேசையில்

அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடவுள்ளதாக அரசியல் மேடையில் பேசப்படும் நாட்டின் முக்கிய தலைவர்கள் மூவரும் ஒரே மேசையில் அளவளாவிக் கொண்டிருந்த சம்பவம் நேற்று (24) இடம்பெற்றது.

நாட்டின் சகோதார மொழி ஊடகவியலாளர் ஒருவரின் மகளின் திருமண வைபவம் கொழும்பு சினமன் கிராண்ட் ஹோட்டலில் நேற்று இடம்பெற்றது.

இதில் கலந்துகொள்வதற்கு வருகை தந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும், பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவும் நட்பு ரீதியில் உரையாடிக் கொண்டிருந்தனர்.

இந்த நிகழ்வில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உட்பட அமைச்சர்கள் பலரும் கலந்துகொண்டுள்ளதாகவும் அந்த தகவல்கள் தெரிவிக்கின்றன. 
நாட்டின் முக்கிய தலைவர்கள் மூவரும் ஒரே மேசையில் நாட்டின் முக்கிய தலைவர்கள் மூவரும் ஒரே மேசையில் Reviewed by Vanni Express News on 5/25/2018 10:38:00 PM Rating: 5